ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

சவூதி அராம்கோ விடுதியில் பயங்கர தீ விபத்து! 11 பேர் பலி, 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

தம்மாம் :சவூதி அல்கோபர் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ உலகின் அதிக அளவு தொழிலாளர்கள் வேலை செய்யும்  Saudi national oil company Saudi (Aramco).இதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்கு  மாடி குடியிருப்பு விடுதியில் இன்று காலை 5:45 க்கு ஒரு கட்டிடத்தின் அடி மட்டத்தில் தீ பிடித்தது.

பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்..

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அரிமா சங்கம் (லயன்ஸ் கிளப்) மற்றும் சிப்லா (cipla) மருத்துவ நிறுவனம் இணைந்து நடத்திய ஆஸ்துமா அலர்ஜி இலவச மருத்துவ முகாம்..பரங்கிப்பேட்டை அரசினர் பெண்கள் மேல் நிலை பள்ளியில் நேற்று (20/08/2015) நடைபெற்றது.  அரிமா சங்க தலைவர் ,SS.அலாவுதீன் தலைமையில்  ..பேரூராட்சி மன்ற தலைவர் முஹமது யூனுஸ்முகாமினை தொடக்கி வைத்தார் அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் ராதா கிருஷ்ணன்

துபாயில் புதிய சாலை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது

துபாய் :துபாயில் புதிய சாலை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது,நாடு கடத்தும் நடவடிக்கை வர சட்டத்தில் இடம் பெற்றுள்ளது:
துபாய் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் பல்வேறு விபத்துகளில் 65 பேர் இறந்ததை தொடர்ந்து இந்த புது சட்டம் நடைமுக்கு கொண்டு வந்துள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த நான்கு

மாணவர்கள் பள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட்!

கடலுார் : பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரும் மாணவரை ‘சஸ்பெண்ட்’ செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
கடலுார் மாவட்டம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஜாதிய அடிப்படையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு சமுதாயத்தினருக்கிடையே மோதலாகும் சூழல் உருவானது. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக பெரும்

சனி, 29 ஆகஸ்ட், 2015

இறால் பண்ணைகளை மூடக்கோரி சிதம்பரத்தில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:இறால் பண்ணைகளை மூடக்கோரி சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இறால் பண்ணைகள்
பரங்கிப்பேட்டை அருகே நவாப்பேட்டை கிராமத்தில் 40–க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிராமப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சுற்றுப்புற சூழலும் மாசடைந்து வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை.

பிரச்சினைகள் வராமல் இருக்க ‘எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லக்கூடாது’ மீனவர்களுக்கு கலெக்டர் சுரேஷ்குமார் அறிவுரை


பரங்கிப்பேட்டை:கடலில் பிரச்சினைகள் வராமல் இருக்க தமிழக எல்லையை தாண்டி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கலெக்டர் சுரேஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.
விழிப்புணர்வு கூட்டம்
கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மீனவ கிராம மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டையில் நடந்தது. இதற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார், வனச்சரக

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

கடலுார் மாவட்டத்தில் ஆசிரியர்கள் தில்லாலங்கடி:தூங்கி வழியும் கல்வித்துறை விழிக்குமா?

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் கிராமப் புறங்களில் ஓர் இலக்க மாணவர்களைக் கொண்டு இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாற்ற உத்தரவிலிருந்து தப்பிக்க வருகைப் பதிவேட்டில் போலி மாணவர்கள் பெயர்களை சேர்ப்பது அதிகரித்து வருகிறது.கடலுார் மாவட்டத்தில் 1800க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கிராமங்கள்

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

சாயப்பட்டறையை எதிர்த்து தடையை மீறி கிராம மக்கள் போராட்டம் பழ.நெடுமாறன் பங்கேற்பு

பரங்கிப்பேட்டை பரங்கிப்பேட்டை அருகே பெரியப்பட்டு சைமாடெக்ஸ் சாயப்பட்டறை கம்பெனியை தடைசெய்யக் கோரி, தடையை மீறி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் பழ.நெடுமாறன் கலந்து கொண்டனார்.

பெரியப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட தச்சம்பாளையம் கிராமத்தில் அரசு சார்பில் சாயப்பட்டறை அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகள்

புதன், 26 ஆகஸ்ட், 2015

இறப்புச் செய்தி:ஹாஜா இக்பால்

பரங்கிப்பேட்டை:ஜெயின் பாவா தைக்கால் தெருவில் மர்ஹும் சேக் இப்ராஹிம் (மியான் பண்டாரி) அவர்களின் மகனாரும் மர்ஹும் ஹயாத் கவுஸ் அவர்களின் மருமகனாரும் காதர் மீரான் அவர்களின் மாமனாருமாகிய  ஹாஜா இக்பால் (H. M. H. பள்ளி மோதினார்) அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று(26/08/2015) புதன்கிழமை மாலை 04:30

மீன்களை வாங்க வியாபாரிகள் மறுப்பு;வத்தகரை மீன்பிடி இறங்கு தளத்தில் பரபரப்பு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் (வத்தகரை) மீன்பிடி இறங்கு தளத்தில் மீன்களை வாங்க போதுமான இடவசதி இல்லையெனக்கூறி, வியாபாரிகள் மீன்களை வாங்க மறுத்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை   (வத்தகரை) அன்னங்கோவிலில் மீன்பிடி இறங்குதளம் உள்ளது. இங்கு படகுகள் நிறுத்தவும், கடலில் இருந்து பிடித்து கொண்டு வரப்படும் மீன்களை வியாபாரிகள் வாங்குவதற்காகவும் மீன் வளத்துறை

அரசு டவுன் பஸ் (வாத்தியாப் பள்ளி) சரியாக வராததால் பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை வாத்தியாப் பள்ளிக்கு அரசு டவுன் பஸ்கள் சரியாக வராததால் பஸ் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பரங்கிப்பேட்டை வாத்தியாப் பள்ளிக்கு சிதம்பரம், கடலுார் முதுநகர், கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் மூன்று அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அரசு டவுன்

விவசாயத்தை பார்ப்பதா... போராடுவதா? - டெல்டா விவசாயிகளை அல்லாட வைக்கும் ஷேல் கேஸ் எமன்!

மீத்தேன் என்னும் எமனின் பிடியிலிருந்து தற்போதுதான் தற்காலிகமாக மீண்டது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள். அதற்குள் அடுத்த பேராபத்து, டெல்டா மாவட்ட மக்களை நெருங்குகிறது. ஆம் டெல்டாவை பாழ்படுத்தும் புதிய திட்டமாக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளது பாறை எரிவாயு (ஷேல் கேஸ்) திட்டம்.


ஷேல் கேஸ்- டெல்டா மக்களை மிரட்டும் மற்றொரு எமன்

இந்த திட்டத்தினால் டெல்டா பகுதிகள் முழுவதும் பாலைவனமாவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துள்ளதாக

பழுதடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க பொதுமக்கள் கோரிக்கை

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை ஒன்றியம் வெள்ளாற்றுக்கு தெற்கு பகுதியில் மிகுந்த பாதிப்புடன் உள்ள கல்வி நிறுவன கட்டடங்களை இடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியம், வெள்ளாற்றாங்கரைக்கு தெற்கு பகுதியில் சிங்காரக்குப்பம், தெற்கு பிச்சாவரம், சிதம்பரநாதன்பேட்டை,