ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்..

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அரிமா சங்கம் (லயன்ஸ் கிளப்) மற்றும் சிப்லா (cipla) மருத்துவ நிறுவனம் இணைந்து நடத்திய ஆஸ்துமா அலர்ஜி இலவச மருத்துவ முகாம்..பரங்கிப்பேட்டை அரசினர் பெண்கள் மேல் நிலை பள்ளியில் நேற்று (20/08/2015) நடைபெற்றது.  அரிமா சங்க தலைவர் ,SS.அலாவுதீன் தலைமையில்  ..பேரூராட்சி மன்ற தலைவர் முஹமது யூனுஸ்முகாமினை தொடக்கி வைத்தார் அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் ராதா கிருஷ்ணன்
கவுஸ் ஹமீது முன்னிலை வகிக்க பேரூராட்சி மன்ற தலைவர் துணை தலைவர் நடராஜன் வரவேற் றார் பரங்கிப்பேட்டை அரிமா சங்க நிர்வாகிகள் பங்கேற்ற முகாமில் புதுவை ஜிப்மர் மருத்துவர் நுரையிரல் சிறப்பு நிபுணர் டாக்டர் மதன்ராஜ் பரிசோதனை செய்து சிகிழ்ச்சை அளித்தார்  இதில் ஏற்கனவே முன்பதிவு செய்த 100க்கும் மேற்பட்டோர்  பங்கேற்று பலனடைந்தனர்.
இதில் கவன்சிலர் அருள்முருகன்  கணேஷ் முஹமது மீரான் ராஜன் ,அரிமா சங்க நிர்வாகிகள்  உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்
0 கருத்துகள்:

கருத்துரையிடுக