புதன், 26 ஆகஸ்ட், 2015

அரசு டவுன் பஸ் (வாத்தியாப் பள்ளி) சரியாக வராததால் பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை வாத்தியாப் பள்ளிக்கு அரசு டவுன் பஸ்கள் சரியாக வராததால் பஸ் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பரங்கிப்பேட்டை வாத்தியாப் பள்ளிக்கு சிதம்பரம், கடலுார் முதுநகர், கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் மூன்று அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அரசு டவுன்
பஸ்கள் பெரும்பாலான நேரங்களில் வாத்தியாப்பள்ளி வரை செல்லாமல் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் வரை சென்று அங்கிருந்து சிதம்பரம், கடலுாருக்கு திரும்பிச் சென்று விடுகிறது. இதனால் பஸ் பயணிகள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளியில் இருந்து அதிகளவில் பொதுமக்கள், நோயாளிகள் கடலுார், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
பஸ்சுக்காக பொதுமக்கள் வாத்தியாப்பள்ளியில் காத்ததுக்கொண்டிருக்கும் பெரும்பாலான நேரங்களில் அரசு டவுன் பஸ்கள் அங்கு வராததால் பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்கள் ஆட்டோ பிடித்து பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் வந்து அங்கிருந்து கடலுார், சிதம்பரம் பகுதிக்குச் செல்கின்றனர்.இதனால் அவர்களுக்கு காலவிரயம், பொருட்செலவும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன்கருதி அரசு டவுன் பஸ்கள் பரங்கிப்பேட்டை - வாத்தியாப்பள்ளி வரை சென்று வர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக