ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

துபாயில் புதிய சாலை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது

துபாய் :துபாயில் புதிய சாலை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது,நாடு கடத்தும் நடவடிக்கை வர சட்டத்தில் இடம் பெற்றுள்ளது:
துபாய் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் பல்வேறு விபத்துகளில் 65 பேர் இறந்ததை தொடர்ந்து இந்த புது சட்டம் நடைமுக்கு கொண்டு வந்துள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த நான்கு
மாதங்களில் 165 விபத்துகள் நடந்துள்ளதாகவும்.
எனவே இனி முதல் நடைபாதையில் பைக் ஒட்டுதல், தேவையில்லாமல் வாகனங்களை மாற்றி அமைப்பது,ஓட்டுநர் உரிமம் காலாவதி ஆகியும் அதை பயன்படுத்தி வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலை விதியை மீறி வாகனம் ஓட்டும் போது போலீசாரை ஏமாற்றி அதிக வேகத்தில் வாகனம் ஓட்டி தப்பித்தல் போன்ற குற்றங்களில் ஏற்படும் நபர்களின் வாகனங்கள் கைப்பற்றி 3 மாதத்தில் பிழை கட்டி வாகனத்தை திரும்ப எடுக்கவில்லை எனில் வாகனத்தில் ஏலத்தில் விடவு‌ம் சட்டத்தில் திருத்தம் செய்யபட்டுள்ளது.
இதை தவிர குற்றத்தின் அளவை பொறுத்து நாடு கடத்தவும் சட்டத்தில் மாற்றம் செய்து உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக