தம்மாம் :சவூதி அல்கோபர் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ உலகின் அதிக அளவு தொழிலாளர்கள் வேலை செய்யும் Saudi national oil company Saudi (Aramco).இதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு விடுதியில் இன்று காலை 5:45 க்கு ஒரு கட்டிடத்தின் அடி மட்டத்தில் தீ பிடித்தது.
இந்த தீ மற்ற கட்டிடங்களுக்கு பரவியது. காலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் தூங்கிக்கிட்டு இருந்தனர். இதில் புகை மற்றும் தீயின் காரணமாக 11 பேர் உயரிழந்தனர் .200 க்கும் அதிகமான தொழிலாளர்கள் காயம் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இதில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்த வரும் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிறுவனத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 61000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இதில் இந்தியர்கள் அதிக அளவில் வேலை செய்வது குறிப்பிடத்தக்கது. இறந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று உடனடியாக தெரியவில்லை.இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இந்தியா மற்றும் சவூதி நாட்டவர்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது
தீ அணைப்பு மற்றும் மீட்பு பணியில் 200 தீ அணைப்பு வாகனங்கள் 30 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் பணியில் இடுபடுத்த பட்டது என தீ அணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
source.arabnews.com
Packers And Movers Bangalore to Chennai
பதிலளிநீக்குPackers And Movers Bangalore to Mumbai
Packers And Movers Bangalore to Delhi