புதன், 26 ஆகஸ்ட், 2015

பழுதடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க பொதுமக்கள் கோரிக்கை

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை ஒன்றியம் வெள்ளாற்றுக்கு தெற்கு பகுதியில் மிகுந்த பாதிப்புடன் உள்ள கல்வி நிறுவன கட்டடங்களை இடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியம், வெள்ளாற்றாங்கரைக்கு தெற்கு பகுதியில் சிங்காரக்குப்பம், தெற்கு பிச்சாவரம், சிதம்பரநாதன்பேட்டை,
மீதிகுடி மேற்கு, ராதாவிளாகம், மடுவங்கரை, நக்கரவந்தன்குடி, மேலத்திருக்கழிப்பாலை, புஞ்சைமகத்துவாழ்க்கை உள்ளிட்ட கிராமங்களில் பள்ளிக் கட்டடங்கள் வலுவிழந்துள்ளதால், மாணவர்களின் நலன் கருதி அந்த கட்டங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தாமல் உள்ளனர்.மேலும், கட்டடங்கள் வலுவிழந்து அவ்வப்போது சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுவதால் பள்ளி நேரத்தில் மாணவர்கள் அப்பகுதிக்குச் செல்லாமல் ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணிக்கும் பணியில் உள்ளனர். எனவே, பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டடங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக