ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

பரங்கிப்பேட்டை உட்பட கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை

பரங்கிப்பேட்டை: மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை உட்பட  கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
பரங்கிப்பேட்டையில் நேற்று மாலை 4:00 மணிக்குபெய்ய தொடங்கிய மழை பலத்த இடியுடன் ஒரு மணி நேரம் பெய்தது பின்னர் விட்டு விட்டு இரவு முழுவதும் துறல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது 


இதேபோல் புவனகிரி, சி.முட்லூர், சிதம்பரம், ஆகிய பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்ய தொடங்கியது. பின்னர் விட்டு விட்டு இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது.











கடலூரில் நேற்று மாலை 5 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. விடிய, விடிய மழை பெய்து கொண்டிருந்தது. மஞ்சகுப்பம், புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், தேவனாம்பட்டினம், காராமணிகுப்பம், மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. பண்ருட்டியில் மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்தது. புதுப்பேட்டை, முத்தாண்டிக்குப்பம், காடாம்புலியூர்,ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக