புதன், 12 நவம்பர், 2014

பரங்கிப்பேட்டை ILFS பவர் கம்பெனிக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து டெல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

பரங்கிப்பேட்டை:கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை  சுற்றி கிராம  பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.8 ஆயிரம் கோடி முதலீட்டில் ஐ.எல்.எப்.எஸ் பவர் கம்பெனி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இக்கம்பெனி மூலம் நிலக்கரியை பயன்படுத்தி 3600 மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பவர் கம்பெனிக்கு சுற்றுச்சூழல் அனுமதியை கடந்த 2010ம் ஆண்...
டு மே மாதம் 31ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வழங்கியது. இந்த அனுமதியை எதிர்த்து கடலூர் சிப்காட்
சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு, டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2011ல் வழக்கு தொடர்ந்தது.
சுற்றுச்சூழல் வன சட்டத்தின்படி இந்த தொழிற்சாலை அமைவதற்கு முன்பாக 25 சதுர கி.மீ பரப்பளவில் உள்ள தொழிற்சாலைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை பவர் கம்பெனியால் முறையாக தயாரிக்கப்படவில்லை. இந்த பகுதியில் பெட்ரோல் மற்றும் பெட்டரா கெமிக்கல் தொழிற்சாலைகளுக்காக அரசு அறிவித்திருந்த திட்டத்தையும் கருத்தில் கொள்ளவில்லை.
ஏற்கனவே சிப்காட் பகுதியில் இந்திய அரசு மத்திய சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் டெல்லி ஐ.ஐ.டியும் செய்த ஆய்வின் அடிப்படையில் கடலூர் சிப்காட் பகுதி கிரிட்டிக்களி என்விரான்ட்மென்ட் பொலியூஷன் (critically environment polluted places)
சுற்றுச்சூழலில் மாசுபட்ட பகுதியில் 16வது இடமாக குறிக்கப்பட்டுள்ளதும், அவர்கள் அளித்த ஆய்வு அறிக்கையில் கவனிக்கப்படவில்லை, என குறிப்பிட்டு அனுமதியை ரத்து செய்யுமாறு கோரியிருந்தனர்.
இதன் மீது விசாரணை நடத்திய டெல்லி பசுமை தீர்ப்பாயம் கடந்த 2012ல் இடைக்காலத் தடை விதித்தது. அக்கம்பெனி ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் தாக்கீதை தயாரித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் வழங்குமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து பவர் கம்பெனி ஒட்டு மொத்த சுற்றுச்சூழல் தாக்கீதை தயாரித்து வழங்கியதின் பேரில் இடைக்காலத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. அதனை எதிர்த்தும் கடலூர் சிப்காட் சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் முறையீடு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதி மற்றும் தலைவர் ஸ்வதந்திராகுமார், உறுப்பினர்கள் யு.டி.சால்வி, டி.கே அகர்வால், ரஞ்சன் சாட்டர்ஜி ஆகியோர் விசாரணை நடத்தி கடந்த 10ம் தேதி தீர்ப்பு வழங்கினர். அதில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஐ.எல்.எப்.எஸ் பவர் கம்பெனிக்கு அளித்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
இதனால் விரைவில் உற்பத்தியை தொடங்கும் நிலையை நோக்கியிருந்த பவர் கம்பெனி நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் புதிதாக ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் தாக்கீதை தயாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை தொடர்ந்த  மீனவர் கிராம முன்னாள் தலைவர் முருகானந்தம், சிப்காட் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு அருள்செல்வம், செம்மங்குப்பம் ராமநாதன் ஆகியோர் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு விவரங்களை தெரிவித்தனர். தமிழ்நாடு நுகர்வோர் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நிஜாமுதீன், தற்போதைய கிள்ளை மீனவர் கிராம தலைவர் ஜவகர் மற்றும் புகழேந்தி, சிவசங்கர், அமிர்தலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.


http://www.thehindu.com/news/national/tamil-nadu/ngt-quashes-eco-nod-for-cuddalore-power-plant/article6587910.ece

http://www.thehindu.com/news/national/tamil-nadu/ngt-quashes-eco-nod-for-cuddalore-power-plant/article6587910.ece


http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=59156

0 கருத்துகள்:

கருத்துரையிடுக