சனி, 12 ஜூலை, 2014

பரங்கிபேட்டை அருகே அடையாளம் தெரியாத பள்ளி மாணவி சடலம்

பரங்கிபேட்டை அருகே கிள்ளையில் கடலோர பகுதியில் புதிய எம்ஜிஆர் திட்டுக்கும், பொன்னந்திட்டுக்கும் நடுவில் கால்வாய் ஓரம் வியாழக்கிழமை மாலை நிர்வாண நிலையில் 15 வயது மதிக்கத்தக்க அரசு பள்ளி மாணவி சடலம் கிடந்துள்ளது. உடலுக்கு அருகாமையில் அரசு பள்ளி சீருடையும், ஸ்கூல் பை, காலணிகள் இருந்துள்ளது. ஸ்கூல் பையில் சீருடை அல்லாத சாதாரண கலர் உடையும், பேஸ்ட், பிரஷ், ரப்பர் ஆகியவை இருந்துள்ளது. ரப்பரில் செல்வி, 10-ம் வகுப்பு என எழுதப்பட்டுள்ளது.
சுடிதாரில் டைலரிங்க் அடையாளமாக gayathri 9786977100 என்ற எண் உள்ளது .. செல்வி 10 std என்று எழுதப்பட்ட அழிக்கும் ரப்பர் ஒன்று அருகில் கிடந்த ஸ்கூல் பேக்கில் உள்ளது..அதனுள் கடலூர் பச்சாங்குப்பம் பகுதியில் உள்ள கிருஸ்த்துவ ஆலயம் ஒன்றின் மத போதனை துண்டு காகிதம் ஒன்றும் உள்ளது இறந்து போய் சுமார் 48 மணி நேரத்திற்கு மேல் இருக்கும் தற்போது பிரேதம் சிதம்பரம் மருத்துவமனை சவக்கிடங்கில் அடையாளம் காண்பதற்காக உள்ளது...
இப்படத்தின் மூலம் ஏதேனும் தகவல் தெரிவிக்க வாய்ப்பிருந்தால் தெரிவியுங்கள்...கூடுமானவரை இச்செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள் கடலூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள நண்பர்களுக்கு தெரிந்து கடந்த மூன்று நான்கு நாட்களாக யாரேனும் காணாமல் போயிருந்தால்  அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தெரிவியுங்கள்.....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக