ஞாயிறு, 9 ஜூன், 2013

பரங்கிப்பேட்டை கால்பந்தாட்ட போட்டிகள்:கோப்பையை வென்றது புதுச்சேரி அணி!

பரங்கிப்பேட்டை:  பரங்கிப்பேட்டையில்  மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள்  கடந்த (07/06/2013) ம் தேதி   (வெள்ளிக்கிழமை)வாத்தியப்பள்ளி மைதானத்தில் தொடங்கி நிறைவு நாளான  இன்று (09/06/2013) ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டிகள் நடைபெற்றது  முதல் பரிசுக்கான  ஆட்டத்தில்  புதுச்சேரி அணியை எதிர் கொண்டது  கடலூர் அணி  இரு அணிகளும்
கடுமையாக முயற்சித்தும்  கோல்  அடிக்க  முடியாது ஆட்டம் "டிரா" ஆனது அதிக(7) புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில்  புதுச்சேரி அணி முதல் பரிசை தட்டிச் சென்றது .கடலூர் அணி(6 புள்ளிகள்) பெற்று  இரண்டாம் பரிசை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுக்கான ஆட்டத்தில் பரங்கிப்பேட்டை "ஏ" அணியும், நாகூர் அணியும் மோதின. இதில் நாகூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பரங்கிப்பேட்டை "ஏ" அணியை தோற்கடித்து மூன்றாம் பரிசை வென்றது. கோப்பையை கைப்பற்ற  தவறினாலும் முதல் முறை நடை பெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் உள்ளூர் அணியான பரங்கிப்பேட்டை(PUFC ) "ஏ" நான்காம் பரிசை  வென்றது பின்னர் நடைபெற்ற  பரிசளிப்பு விழா வில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினர்  பரிசளிப்பு விழா ஏற்பாடுகளை கால்பந்தாட்ட போட்டி குழுவினர்கள் சிறப்பாக செய்து இருந்தனர் 


 
 


 
படங்கள் :PUFC page 
 

3 கருத்துகள்:

 1. வென்ற அனி விளையாட்டுவீரர்கலுக்குவாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. Salaam,

  PUFC really it's a well beginning, good luck for your future matches and we all should thank to Mr.Naina Naana and his team for taking full effort to conduct this match.

  Regards,
  Mee.Hajah Kamal (Mee.May)

  பதிலளிநீக்கு