திங்கள், 10 ஜூன், 2013

சமுக வலைதளங்கள்:நன்மையும், தீமையும்


அஸ்ஸலாமு அலைக்கும்

சமூக வலைத்தளங்கள் ஓர் பார்வை.

சமூக வலைத்தளங்கள் என்றால் என்ன?

இன்றைய காலத்தில் இணையத்தில் பரிட்சயமான பெரியவர்கள் முதல், கணினியை கையாளத்தெரிந்த சிறு பிள்ளைகள் வரை ஒரு சேர தற்பெருமை அடித்துக்கொள்ளும் களம் தான் இந்த சமூக வலைத்தளங்கள் . இதில் நட்புறவுகள் மேம்படுத்தல், தகவல் பரிமாற்றங்கள் போன்ற சில பயன்கள் இருந்தாலும், மேலோங்கி நிற்பது அவரவர்களின் தற்பெருமைகளே . அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியின் மூலம் மேற்படி கூற்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன் வரலாறு என்ன?

மின்அஞ்சல் உருவான காலத்திற்கு பிறகு , அமேரிக்காவின் மினஞ்சல் நிறுவனமான AOL (America OnLine) , தன்னுடைய வாடிக்கையாளர்களை கவரம் வகையில் , அலைபேசியில் உள்ள குறுஞ்செய்தி போன்று , மின் அஞ்சல் முகவரிகளுக்கிடையே பரிமாறிக்கொள்ளும் வகையில் ஒரு குறுஞ்செய்தி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. நாளடைவில் மின்அஞ்சல் முகவரியுடன் சில தகவல் குறிப்புகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொளும் படியும் பிறகு அவரவர்களுக்கு உரிய சில தொகுப்புகளையும் சேமித்து வைத்து பிறருடன் பகிர்ந்துக்கொள்ளவும் என வளர்ந்து தற்போது, அனைத்து இளைஞர் சமுதாயத்தையும் ஆக்கிரமித்து நிற்கின்றது.

பயன்கள் என்ன?

• முதலாவதாக இணையவழி விளம்பரப்படுத்தும் நிறுவனங்களுக்கே இது பெரிதும் பயன்படுகின்றது. அதாவது ஒவ்வொரு உறுப்பினர்களின் சுய தகவல்கள் மற்றும் அவர்களுடைய இருப்பிடம், விருப்பமானவைகள் , அவர்கள் இணையத்தில் தேடும் தகவல்கள் அல்லது உலவும் பக்கங்களை வைத்து , அதற்கு தொடர்புடைய நிருவனங்களின் விளம்பரங்களை அவர்களிடத்தில் சேர்க்கின்றது.
• தொழில் புரிவோர் மற்றும் அலுவல்களில் உள்ளோர்க்கு, தங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களை தொடர்பு கொண்டு, தகவல் பரிமாற்றங்கள் மற்றும் காணொளி சந்திப்புகள் மூலம் தங்களின் குறைவான நேரத்தில் அதிக உற்பத்தி திறனை ஏற்படுத்திக்கொள்ள பயன்படுகின்றது. மாறாக இளைஞர்களுக்கு இதன் மூலம் எந்த உற்பத்தி திறனும் கூட வழியில்லை.
• நட்புறவுகள் அதிகமாக்கிக்கொள்ள பயன்படுகின்றது. இருப்பினும் புதிய நன்பர்களின் குணநலன்கள் பற்றி உறுதியாக சொல்ல முடியாது. அதை அறிந்துக்கொள்ள பல காலம் செல்லும். காரணம் யாவரும் தன்னுடைய நல்லபக்ககளையே பகிர்ந்துகொள்கின்றனர். அவர்களின் தவறான முகங்கள், பொதுவில் வைக்கபடாமல், தனிப்பட்ட மினஞ்சல்கள் மற்றும் அழைப்புகளின் மூலமே தெரியவரும்.
• சமூக ஆர்வளர்கள் தங்கள் கருத்துக்களை , செய்திகளை மக்களிடம் சென்று சேர்க்க பயனுள்ளதாக இருக்கின்றது.
• பயனுள்ள தகவல்களை தேடும் ஒருவர், தங்களுக்கு கிடைத்த சில தகவல்களை பிறருடன் பகிர்ந்துக்கொள்ள உதவுகின்றது.

தீமைகள் என்ன?

• முதலாவதாக இளைஞர் சமுதாயத்தில் பலரை தற்பெருமை மிக்கவர்களாக உருவாக்குகின்றது. தங்களின் இயல்பான வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை , புகைப்படம் , குறும்படம் மூலம் பகிர்ந்துக்கொள்ளுதல் என்பது ஏற்றுகொள்ளகூடியதாக இருந்தாலும் , அதைவிட அதிகமாக தன் நிலைமைக்கு மீறிய இயல்புவாழ்கைக்கு புறம்பான ஒரு பெருமை உலகை காண்பிக்கும் வகையிலேயே தகவல்கள் பதியப்படுகின்றது. பிறருடைய புகைப்படம் மற்றும் தகவல்கள் மூலம், தன்னிலைக்கு மீறிய வாழ்க்கை தரத்தை வாழ முற்படுத்துகின்றது. இதனால் பெற்றோர்களுக்கும் , பிள்ளைகளுக்கும் இடையே மன உளைச்சலையே விதைக்கின்றது.
• வங்கிகளில் நம் அடையாளத்தை உருதிசெய்துக்கொள்ள பயன்படுத்தும் பிறந்த நாள் , மற்றும் பலவித இரகசியம் பேணப்பட வேண்டிய தகவல்களையும் பொதுவில் வைத்து விடுகின்றோம். இதனால், தகவல் திருட்டு மூலம் பலவிதமான இழப்புகள் ஏற்பட காரணமாக அமைகின்றது.
• நாம் பொதுவில் வைக்கும் தகவல்களை பயன்படுத்தி நாமே அறிந்திராத சில தீயவர்கள், நம் நண்பர்களிடமோ , உறவினர்களிடமோ மோசடிகள் செய்வதற்கு வழிவகுக்குகின்றது.
• மாணவர்கள் , தகவல் பகிர்தல் , இணையவழி விளையாட்டுக்கள் என சமூக வலைத்தளங்களில் அதிகமான நேரங்கள் சிலவிடுகின்றனர். இதனால் அவர்கள் தங்களின் கல்விக்காகவும், உடற்பயிற்சிக்காகவும் உரிய நேரங்கள் அளிப்பதில்லை. அதன் மூலம் கல்விநிலையில் பின்னடைகின்றனர். மேலும் உடற்பயிர்சிக்குறிய விளையாட்டுகளில் ஈடுபடாததாலும் , அதிகமான நேரம் கணினி அல்லது அலைபேசியினை உற்று நோக்குவதாளும், கண் பாதிப்புகளும் ஏற்படுகின்றது . மனதளவிலும் அவர்களின் எண்ணங்கள் எப்பொழுதும் அதையே சிந்திக்கின்றதாக உளவியல் நிபுனர்கள் எச்சரிக்கின்றனர்.
• இந்த சமூக வலைத்தளங்கள் புகைப்பிடித்தல் போன்று மாணவர்களை தன்வயப்படுத்தி, அவர்களின் அன்றாட நிகழ்வுகளிலிருந்தும் பிரித்து வைக்கின்றது. அவர்களின் அதிகமான நேரங்களை ஆக்கரமித்து, அவசியமான காரியங்களையும் கூட பிற்படுத்தவும், மறக்கவும் செய்கின்றது.
• சிலர் அன்றாட நிகழ்வுகளை பகிர்தல் மூலம் , தீயவர்கள் பலவித மோசடிகள் செய்கின்றனர். ஒருவீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதை ஆராய்ந்த காவல் துறையினர், கொள்ளை அடித்தவர்களை கண்டுபிடித்து விசாரணை செய்கையில், அந்த வீட்டு பெண் , சமூக வலைத்தளத்தில் தாங்கள் விடுமுறை சுற்றுபயணம் செல்வதாகவும், குறிப்பிட்ட சில தினங்களுக்கு வெளியூரில் இருப்பதாக பகிந்திருந்தையும் வைத்து, அந்த வீட்டில் யாரும் இருக்க வழியில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு, கொள்ளை அடித்தோம் என்பதாக கூறியுள்ளனர்.
• வீட்டிற்கு வந்திருக்கும் உறவினர்களுடன் கலந்துரையாடாமல், உறவாடாமல், எப்பொழுதும் இணையத்திலேயே ஒன்றியிருக்க செய்து, உறவினர்களை இழக்க செய்கின்றது.

சில புள்ளி விவரங்கள்

• சமூகவளைத்தளங்களில் ஈடுபடும் 69% இளைஞர்கள் , இணையவழி நன்பர்களை இனியர்வர்களாக நினைக்கின்றனர். மாறாக 88% அவர்கள் சாரசரியாகவோ அல்லது தவரான எண்ணம் உள்ளவர்களாவோ இருக்கின்றனர்.
• சமூகவளைத்தளங்களில் ஈடுபடும் 65% இளைஞர்கள் , அவர்களை பற்றி அவர்களே பெருமை பட்டுக்கொள்கின்றனர்
• சமூகவளைத்தளங்களில் ஈடுபடும் 41% இளைஞர்கள் , புதிய நண்பர்கள் மூலம் ஏதாவது ஒரு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
• சமூகவளைத்தளங்களில் ஈடுபடும் 25% இளைஞர்கள் , நேருக்கு நேர் ஆரோக்கியமில்லா வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனர்
• சமூகவளைத்தளங்களில் ஈடுபடும் 22% இளைஞர்கள் , தங்களின் பழைய நட்புகள் சில முறிந்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்
• சமூகவளைத்தளங்களில் ஈடுபடும் 22% இளைஞர்கள் , தங்களுக்கு பிடித்தமான சமூகவளைத்தை, ஒரு நாளைக்கு 10 முறையாவது திறக்கின்றனர்.

தீர்வு என்ன ?

• பள்ளிகூட மாணவர்களை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்திற்கு மேல், இதுப்போன்ற சமூக வலைத்தளங்களை பார்வை இடுவதை தடுக்க வேண்டும்.
• சமூக வலைத்தளங்களின் விளையாட்டுகளிலிருந்து திசைதிருப்பி , உடற்பயிற்சி ஏற்படுத்துகின்ற ஆரோக்கீயமான விளையாட்டுகளில் ஈடுபடுத்தவேண்டும்.
• நம்மை பற்றிய அனைத்து உண்மை தகவல்களையும் பகிர்தலை தவிர்க்க வேண்டும்.
• நம் தகவல்கள் நம்முடைய நட்புவட்டத்திற்கு மட்டுமே அனுமதிக்கும் படி சமூக வலைத்தளங்களின் நிரல்களை வகுத்துக்கொள்ளவேண்டும்.

தன்னலமற்ற, தற்புகழ்சியுமற்ற ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாக பிரார்த்திப்போம்.
வஸ்ஸலாம்
வஜ்ஹுதீன்

முக நூல் திண்ணை குழுமத்தில் நடந்த கட்டுரை  போட்டி யில் பங்குபெற்ற கட்டுரை
இந்த கட்டுரையே நமக்கு அளித்தது
கட்டுரையாளர் :சகோதரர் : வஜ்ஹுதீன்( அல் –கோபார் )
நன்றி :திண்ணை குழுமம்

2 கருத்துகள்:

  1. அருமை. இக்கட்டுரை எழுதப்பட்ட காலத்தைவிட இக்காலத்தில் (2017) சமூக வலைதளத்தின் பங்கு அதிகம். மாறாக, தீமை குறைந்துவருவதாக எனக்குப் படுகிறது.

    பதிலளிநீக்கு