சனி, 25 அக்டோபர், 2014

கடலூர் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: பரங்கிப்பேட்டை பயணிகள் உட்பட 60 பேர் படுகாயம்

கடலூர்:கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு ஒரு தனியார் (TVMS) என்ற பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ்சை கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த டிரைவர் பழனி (வயது 48) ஓட்டி சென்றார்.
பஸ் கடலூர் அருகே காரைக்காடு என்ற இடத்தில் சென்றபோது இந்த பஸ்சும், சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக கடலூர் நோக்கி பயணிகளை ஏற்றி வந்த மற்றொரு தனியார் (CTP)என்ற பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் பஸ் டிரைவர் பழனி, கண்டக்டர் நவீன்குமார் (28) மற்றும் 2 பஸ்களிலும் பயணம் செய்த சென்னையை சேர்ந்த அமுதா (40), திவ்யா (13), சபரி (6) மற்றும் கடலூர் கே.என். பேட்டையை சேர்ந்த அருள்கண்ணன் (30), காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த ஜெயசீலன் (35) உள்பட 60–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் இவ்விபத்தில் பரங்கிப்பேட்டையை சேர்ந்த முன்று பெண்கள் உட்பட சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்ன்றன





இதையடுத்து 10–க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு காயமடைந்த அனைவரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தோரை மினிவேன், ஆட்டோக்களிலும் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து செய்தி அறிந்து உடனே  மீட்பு மற்றும் காயம் பட்டவர்களுக்கு உதவியில் கடலூர் OT மற்றும்  பரங்கிப்பேட்டை தன்னார்வ இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் முதுநகர் மற்றும் கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை tntj அமைப்பினர் இடுபட்டனர் இவ்விபத்தில் பரங்கிப்பேட்டையை சேர்ந்து 8 பெண்கள் மற்றும் 4 ஆண்களுக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஊர் திரும்பினர்


 



 
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் எம்.சி.சம்பத், அருண்மொழித்தேவன் எம்.பி., கலெக்டர் சுரேஷ் குமார், சப்–கலெக்டர் டாக்டர் ஷர்மிளா, எம்.எல்.ஏ.க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்பிரமணியன், முருகுமாறன், செல்வி ராமஜெயம், கடலூர் நகரசபை தலைவர் குமரன், துணை தலைவர் சேவல்குமார் மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர்  முஹம்மது யூனுஸ் மற்றும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர்  ஹமீது அப்துல் காதர் ,கடலூர் OT ஐக்கிய ஜமாஅத் தலைவர்,  ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக