வியாழன், 6 ஆகஸ்ட், 2015

பரங்கிபேட்டையில் பைக்குள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து சம்பவ இடத்திலே இருவர் சாவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ரயிலடி அடுத்த  முட்லூர் ரோட்டில் பைக்குள் நேருக்கு நேர் மோதி கோர விபத்தில்  சம்பவ இடத்திலே இருவர் உயிரிழந்தனர்  மேலும் முவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பரங்கிபேட்டையில் இருந்து முட்லூர் நோக்கி ஒரு பைக்கும் முட்லூரிலிரிந்து பரங்கிபேட்டையை   நோக்கி ஒரு  வரும் போது பரங்கிப்பேட்டை ரயிலடி அடுத்த கோவில் அருகே நேருக்கு நேர்
மோதிக் கொண்டது மோதிக் கொண்ட பைக்குகள் சுக்கு நுராக நொறுங்கியது  இந்த கோர விபத்தில்  பரங்கிப்பேட்டை தெத்துகடையை சேர்ந்த  அன்சாரி வயது 36 மற்றும்  சிதம்பரத்தை சேர்ந்த சுரேஷ் வயது 24  ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்  சம்பவம் அறிந்த உடன் பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் ஆம்புலன்ஸ் சமபவ இடத்திற்கு வந்து  இறந்தவரின் உடல்களை ஏற்றிக்கொண்டு பரங்கிபேட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது . மேலும் படுகாயமடைந்த   இருவர் அரசு 108 ஆம்புலன்ஸ் மூலம்  கொண்டுசென்று சிதம்பரம் அரசு   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. காயமாடைந்தவர்கள்  இருவர்  செல்வமணி    அறியகோஸ்டியை சார்ந்ததவர் கொளஞ்சி,அகரம் மானம்பாடியை சார்ந்தவர்.  விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலிசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் .
0 கருத்துகள்:

கருத்துரையிடுக