செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

மோடியின் பொய்யும் நிகழ்கால உண்மையும்

இந்தியாவின் 69வது சுதந்திர தினத்தன்று   கோட்டையில் வைத்து மோடி அவர்கள் பேசியது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது .
எனது அரசு மீது ஒரு ரூபாய் ஊழல் குற்றம் சொல்ல முடியாது என்கிறார் கோட்டையில் இருந்துகொண்டு மோடி அவர்கள். பின்வரும் ஊழல் பற்றி கோட்டையில் பேசவேண்டாம் ஆனால் பாராளுமன்றத்தில் பேசி இருக்க வேண்டும், இருந்தபோதிலும் பேசவில்லை ஏன்?ஒவ்வொவரு ஊழலாக பார்ப்போம்.முதலில் இந்திய நிதியமைச்சகத்தினால் தேடப்படுகிற சர்வதேச பொருளாதார குற்றவாளியான லலித் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சட்டவிரோதமாக உதவி செய்தது.
இதன்மூலம் ஒரு அமைச்சர் கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தை விதிமுறைகளை மீறியதோடு, சட்டவிரோதமாக ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டும் அவர்மீது எழுந்தது. நவீன ஊழலின் இந்த முகத்தை எதிர்கட்சிகள் பல கேள்விகள் கேட்டும் இன்னும் தெளிவான விளக்கம் கூறாமல் கோட்டையில் இவ்வாறு பேசுவது சரியா ???
மேலும் லலித் மோடிக்கு உதவியதாக வசுந்தரா ராஜே மீது குற்றச்சாட்டு வெடித்தது. இதில் இவர் சட்டவிரோதமாக உதவி செய்ததற்கு கைமாறாக அவரது மகன் துஷ்யந்த் சிங்கின் நிறுவனத்திற்கு ரூ.10 மதிப்புள்ள பங்குகள் மீது ஒரு லட்ச ரூபாய் வீதம் அதிக விலை கொடுத்து 13 கோடி ரூபாய் முதலீடு செய்தது வெளிவந்து உள்ளது, இதற்க்கு மோடியின் பதில் என்ன ??
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி அவர்கள் கல்வி தகுதி மோசடி பற்றி பேசாதது என்ன ??
மகாராஷ்டிரா மாநில குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரூ.206 கோடிக்கு பகிரங்க டெண்டர்கள் விடாமல் விருப்புரிமை அடிப்படையில் வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றசாட்டுக்கு பதில் என்ன ?
சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் ராமன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரூ.36 ஆயிரம் கோடிக்கு பொது விநியோகத்துறையில் உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றதாக குற்றசாட்டுக்கு பதில் என்ன ?
மத்தியபிரதேச மாநிலத்தில் தொழில்முறை தேர்வு வாரியம் அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தியதில் நாட்டையே உலுக்கிய ‘வியாபம்” என்ற மெகா ஊழல் மேலும் அதை மையாமாக வைத்து நடந்த கொலைகள் பற்றி மோடி பேசவில்லை ??
ஊழலற்ற ஆட்சி நடத்தப்போவதாக தேர்தல் நேரத்தில் வீரவசனம் பேசிய நரேந்திர மோடி 69 சுதந்திர தினத்தன்றும் பேசியது மக்களை முட்டாளாக்கும் முயற்சியா ? இல்லை தன்னை கோமாளியாக காட்டும் முயற்சியா ?
எப்போதும் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்வதில் அக்கறை காட்டுகிற மோடி இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கிற மெகா ஊழலுக்கு பதில் சொல்லாமல் பொய்யை சொல்வது ஏன்?
ஒரு ரூபாய்க்கு யார் தான் ஊழல் செய்வார்கள். மோடி என்கிற பெயரில் கோடி கணக்கில் அல்லவா அள்ளுகிறார்கள் மோடியின் கட்சிக்காரர்கள்.
69 சுதந்திர தினம் அன்று மோடி அவர்கள் ஊழல் பற்றி பேசாமல் வாயாளவில் நான்கு நல்ல அறிக்கை விட்டு இருக்கலாம்.
-யூசுஃப் ரியாஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக