புதன், 19 ஆகஸ்ட், 2015

ஷேல் காஸ் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:டெல்டா பகுதியில் பூமிக்கு அடியில் பாறையை உருக்கி எரிவாயு எடுக்கும் ஷேல் காஸ் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் நடந்தது.
சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர்(ஆர்.டி.ஓ) அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலுார் மாவட்டத்
தலைவர் மாதவன் தலைமை தாங்கினார்.
சிதம்பரம் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், கண்டன உரையாற்றினார். மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், ஷேல் காஸ் திட்டத்தை எதிர்த்தும் தடை செய்யக்கோரியும் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயக்குமார், ராதாவிளாகம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவி ரங்கநாயகி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் கற்பனைச்செல்வன், பிரகாஷ், வாஞ்சிநாதன், சதானந்தம், ஜாகீர்உசேன், கோவிந்தராஜ், செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக