பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி பரங்கிபேட்டை அரசு மருத்துவமனையிலும்
வேலைநிறுத்த போராட்டம் செய்தனர்.
கடலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிக்கிச்சையின் அறிவுக்கரசி என்ற இளம்பெண் இறந்து விட்டார் .அதை தொடர்ந்து
இறந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனை விசாரித்த போலீசார் மருதுவரின் கவனக்குறைவால் இறந்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள கடலூர் புதுநகர் போலீசாரை கண்டித்தும் இது போன்ற மரணம் இயற்கையானது இதற்கு மருத்துவர்கள் பொறுப்பாக மாட்டார்கள் என்று கூறியும் மருத்துவர் மேல் போடப்பட்ட வழக்கை சாதாரண வழக்காக பதிய வேண்டும் எனகோரி கடலூர் மாவட்ட அரசு மருத்துவர்கள் ஊழியர்கள் போராடி வருகின்றனர்
அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இன்று பரங்கிபேட்டை அரசு மருத்துவமனையிலும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் வேலைநிறுத்த போராட்டதில் ஈடுபட்டனர்
இதனால்.காலையில் உள் நோயாளிகளும் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படாததால் அந்த பிரிவுகளிலும் நோயாளிகள் வெகு நேரம் காத்திருந்து வாங்கி சென்றதை காணமுடிந்தது
நன்றி :முத்து ராஜா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக