
பரங்கிப்பேட்டை அரசினர் ஆண்கள் பள்ளி மற்றும் மகளிர் மேல் நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் அணிவகுப்புடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. மேலும் பரங்கிப்பேட்டை யில் உள்ள தனியார் பள்ளிகள் அனைதிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் சுதந்திரதினதை முன்னிட்டு மூவர்ண கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
மேலும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலுகம்
மற்றும் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் சுதந்திரதினம் மூவர்ண கொடியேற்றி கொண்டாடப்பட்டது
பரங்கிப்பேட்டைபேரூராட்சியில் தலைவர் முகமது யூனுஸ், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் அசோகன் கலிமா மெட்ரிக் பள்ளியில் ஷேக் அப்துல் காதர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். மற்றும் மூனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு தாளாளர் முகம்மது யூனுஸ் தலைமை தாங்கினார். முன்னாள் முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் பள்ளி முதல்வர் மகேஷ்சுந்தர், மேலாளர் ராஜ்குமார், பொறியாளர் ரமேஷ், மற்றும் சேரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மற்றும் SDPI கட்சியின் சார்பாக பரங்கிப்பேட்டை பெரிய தெரு முனையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது இதில் சமூக ஆர்வலர் கல்வியாளர் க மு கவுஸ் பங்கேற்று சிறப்பித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக