பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை பேரூராட்சி துப்புரவு ஊழியர் சங்கம் சார்பில் சிஐடியூ சங்க தொடக்க விழா பேரூராட்சி அலுவலக வாயிலில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். விழாவில் உள்ளாட்சி ஊழியர் சங்க சம்மேளன மாநிலத் தலைவர் மூசா பங்கேற்று, சங்கக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:
துப்புரவு ஊழியர்கள் அரசு ஊழியர்களில் மிகவும் கடைக் கோடியாக இருந்து பொதுமக்களின் சுகாதார வாழ்வுக்காக பாடுபட்டு வருகின்றனர். ஆனால் இவர்களின் வாழ்க்கை கேள்விகுறியாகி சமூகத்தில் இன்னும் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள்.
எனவே துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அரசு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப துப்புரவுத் தொழிலாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் சங்க சிறப்புத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டத் தலைவர் சிவராமன், சிஐடியூ நிர்வாகிகள் ஜெயசீலன், வேல்முருகன், வாலிபர் சங்க நகரச் செயலர் ஹசன்முகமது உள்ளிட்டோர் பேசினர். சங்கச் செயலர் சி.வேல்முருகன் நன்றி கூறினார்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக