வெள்ளி, 24 ஜூலை, 2015

மாவட்ட ஐக்கிய ஜமாஅத்தின் கடலூர் மாவட்ட கிராமங்களில் ஃபித்ரா விநியோகம்

பரங்கிப்பேட்டை:கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பாக கடந்த 16/07/2014 அன்று ஹாஜி முஹம்மது யூனுஸ் அவர்களின் தலைமையில்  தன்னார்வ நண்பர்கள் சுமார் 25 பேர் இணைந்து ஃபித்ரா வழங்கலை கடலூர் மாவட்டம் எறும்பூர், வளையமாதேவி, பரங்கிபேட்டை, முட்லூர், கடலூர் மற்றும் பண்ருட்டி தாலுக்காவில் உள்ள மிக ஏழ்மையிலுள்ள 300 குடும்பங்களுக்கு பெருநாள் கொண்டாட தேவையான மளிகை பொருட்கள், ஒரு சேலை, ரொக்கம் ரூபாய் 100, புர்கா அடங்கிய பாக்கட்களை  வேனில் ஏற்றி சென்று விநியோகித்தனர் அக்குடும்பங்களை மகிழ்வுற செய்ததோடு ஃபித்ரா வழங்கல் முறையை தத்தமது கிராமங்களில் அவர்களாகவே வரும் வருடங்களில் நடைமுறைப்படுத்த ஆர்வமூட்டினர்

பரங்கிப்பேட்டையிலிருந்து ஹாஜி முஹம்மது யூனுஸ் அவர்கள் தலைமையில் , ராசி ராஜா, மீமே மீரா ஹுசைன், U. ஹபீபுர் ரஹ்மான், R. ஹபீபுர் ரஹ்மான், ME அஷ்ரப் அலி, GEM மீரான், AMA ஜின்னா, SS அலாவுதீன், MGM ஹஜா கமால், VS உதுமான் அலி, AK சாலிஹ் மரைக்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்    

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஜமாஅத் செயலர் திரு. I. கமாலுதீன், கடலூர் நகர ஜமாஅத் தலைவர் அக்பர் அலி, மஹால்லா முதவல்லிகள், நிர்வாகிகள், பண்ருட்டி பைத்துல் மால் தலைவர் நூர் பாஷா, MKM பஷீருல்லாஹ் ஆகியோர் உடனிருந்தனர்.
 






 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக