வெள்ளி, 24 ஜூலை, 2015

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் & வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

கடலூர்:படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் புதுவையில் இயங்கும் சர்கோ குளோபல் சர்வீசஸ் என்ற நிறுவனம் பங்கு பெற்று பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளது. மேல்நிலைக்கல்வி, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலைப் பட்டம் ஆகிய கல்வித் தகுதிகளுக்குரிய பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதில், தேர்வு செய்யப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு பதிவு உயிர்ப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது.
அரசுப் பணியிடங்களுக்கான பணிக்காலியிட அறிவிப்புகள் பெறப்படும் போது விதிமுறைகளின் படி பரிந்துரை செய்யப்படும்.
எனவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்

மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள தகுதியுள்ள மனுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த உதவித்தொகை பெற கல்வித்தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி, பட்டயப்படிப்பு தேர்ச்சி மற்றும் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்பத்தின் மொத்த வருமானம் மாதம் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் அல்லது ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் 45 வயது மற்றும் இதர வகுப்பு விண்ணப்பதாரர்கள் 40
வயது பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.
விண்ணப்பதாரர் அரசுத்துறை மற்றும் தனியார்த்துறையில் எவ்வித ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராகவோ, உதவித்தொகை பெறுபவராகவும் இருக்கக்கூடாது. அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ–மாணவிகளாக இருக்க கூடாது.
மேற்கண்ட தகவலை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக