பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே செயல்பட இருக்கும் அனல் மின்நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் ஆய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆய்வு கூட்டம்
தமிழக வாழ்வுரிமை கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் புவனகிரி அருகே டி.முட்லூரில் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கோபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முடிவண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கார்த்தி வரவேற்றார். கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பத்தில் செயல்பட இருக்கும் தனியார் அனல் மின்நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
வெளி மாநில இளைஞர்களுக்கு அங்கு வேலை வாய்ப்பு அளித்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட துணை தலைவர் கணேசன், தலைமை கழக பேச்சாளர் தங்கதனபால் மற்றும் வீரபாண்டியன், கோகுலகிருஷ்ணன் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக