பரங்கிப்பேட்டை:நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் (ஈதுல் ஃபித்ர் அரபு மொழி: عيد الفطر) என்பது இஸ்லாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும். இசுலாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது. ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் என்பது பொருளாகும்.
ஒரு மாதம் ஏழைகளின் பசி உணர பசித்திருந்து, புலனடக்கம் , நாவடக்கம் போன்ற பயிற்ச்சிகள் பெற்று தர்மங்கள் செய்து அம்மாதத்தை நிறைவு செய்யும் பொருட்டு கொண்டாடப்படுகிறது பெருநாள்.
பரங்கிப்பேட்டை மக்களாலும் கடந்த 17 மற்றும் 18 தேதிகளில் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. பரங்கிப்பேட்டை மக்கள் என்னும் போது நிச்சயம் இஸ்லாமியர்கள் மட்டும் அல்ல, பரங்கிப்பேட்டையில் உள்ள மாற்று மத சகோதரர்களும் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து நோன்பு பெருநாள் கொண்டாடினர் என்றே சொல்லவேண்டும்.
எத்தனை மதவாத சக்திகள் இங்கு இந்து முஸ்லிம் கலவரக்ளை ஏற்படுத்தி அதன் மூலம் குளிர்காய எண்ணினாலும் அவர்களின் சூழ்ச்சிவலைகளில் சிக்காமல் அவர்களின் சதித்திட்டங்களுக்கு செருப்படிகள் தருவது போல நோன்பு கஞ்சிகளும் பலகாரங்களும் பகிரப்பட்டுகொண்டுதான் இருக்கின்றன்.
பரங்கிப்பேட்டை மக்களின் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையும் எடுத்துக்காட்டும் விதமாக முதல் முயற்சியாக mypno தளம் மற்றும் Crew of Novianz இனைந்து உருவாக்கியுள்ள இந்த வீடியோ சகோதரத்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழகத்தின் பல ஊர்களில் பரங்கிப்பேட்டையும் முதல் வரிசையில் நிற்கிறது என்பதற்கு ஒரு சாட்சி.
தொப்புள் கொடி உறவுகளின் நேசத்தையும் அன்பையும் எடுத்துக்காட்டும் இந்த காணொளியை வழங்குவதில் mypno பெருமிதம் கொள்கிறது. இதற்காக உழைத்த Crew of Novianz குழுவினருக்கு பாராட்டுக்கள்.
முதல் முயற்சியில் மிக மிக சிறிய தொழிநுட்ப இடர்களை தாண்டி சிறப்பாக வெளிவந்திருக்கும் இந்த காணொளியை பாருங்கள் பகிருங்கள்....
படம்(இடமிருந்து வலம்): பாதரியார் ஜோஷுமா, மலை நடராஜன், காதர் அலி
படம் உதவி : வலம்புரி சங்கு முகநூல் பக்கம்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக