ஞாயிறு, 19 ஜூலை, 2015

பரங்கிப்பேட்டை அருகே திமுக வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்-மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே புதுச்சத்திரம் பரங்கிப்பேட்டை சாலையில்  நேற்று  (18.07.2015)  தி.மு.க., நடத்தும் நீதி கேட்கும் பேரணி  என்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது....இதில் சுமார் 1,00,000பேர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை 5.30 மணிக்கு புதுச் சத்திரம் வருகை தந்த தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், தமிழக தலைமை தேர்தல் சந்தீப் சக்சேனாவை கடுமையாக சாடினார். முன்னதாக உரையாற்றிய முன்னாள் அமைச்சரும் தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான பொன்முடி, பாட்டாளி மக்கள் கட்சியினை விமர்சித்தார். வரவேற்புரையாற்றிய தி.மு.க மாவட்ட செயலாளர் வெ.கணேசன், தலைமையுரையாற்றிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட
செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், "பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் பல
மருத்துவர்கள் உருவாக தி.மு.க.வின் சமூக நீதி கொள்கையே காரணம் என்றார். இக்கூட்டத்தில்
உரையாற்றிய அனைவரும் மு.க.ஸ்டாலின் தான் 2016ல் முதல்வர் என்ற போது பெரும் திரளாக கூடி இருந்த கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் ஆர்பரித்தனர்.இக்கூட்டத்தில் தி.மு.க.அமைப்பின் 17 மாவட்ட செயலாளர்கள், தி.மு.க.அமைப்பு செயலாளர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்க பரங்கிப்பேட்டையிலிருந்து ஏராளமானோர் கார், வேன், இரு சக்கர வாகனங்கள் மூலம் வந்திருந்தனர், இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ், நகர தி.மு.க. செயலாளர். ஏ.ஆர்.முனவர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்..


புதுச்சத்திரம் அண்ணா திடலில் நீதி கேட்கும் பேரணியை மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். கடலூர் மண்ணின் பெருமைகளை பட்டியலிட்டு அவர் தனது உரையைத் தொடங்கினார்.அப்போது ஸ்டாலின் பேசியதாவது..
நிலத்தை விற்க கூடிய புரோக்கர்கள் என்னை சந்தித்தனர். வீடுகளை விற்க, நிலங்களை விற்க பலர் முன் வருகின்றனர். ஆனால் வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. பணப்புழக்கம் முடக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வருமானம் இல்லை என்று என்னிடம் பலரும் வருத்தம் தெரிவித்தனர். இவர்களுக்கு நான் ஆறுதல் தெரிவித்தேன்.விவசாய பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். விவசாயம் மடிந்து போச்சு. நிலத்தை விற்கவாவது செய்வோம் என்றால் இதனை வாங்க ஆள் இல்லை. இது போன்று தமிழகம் முழுவதும் இந்த நிலைதான்.4 ஆண்டுகள் ஆட்சியில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.ஜெ.,விடுதலை வாங்கினார். முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் நாங்கள் கூறிய பிரச்னைகளுக்கு ஏதும் பதில் சொல்லியிருக்கின்றீர்களா ? சமூக நீதிக்காக போராடிய கட்சி திராவிட முன்னேற்ற கழகம் . அதி.மு.க.,வின் அக்கிரமத்திற்கு நீதி கேட்கும் உணர்வு அனைவருக்கும் வர வேண்டும். தி.மு.க., ஆட்சி காலத்தில் அனைத்து துறையிலும் சாதனை படைத்துள்ளோம்.உலகத்தில் எங்கும் குடி நீரை விற்க கூடிய நிலை இல்லை. இங்கே அம்மா தண்ணீர் சும்மா இல்லை, 10 ரூபாய்க்கு விற்கின்றனர். கலைஞர் ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.ஆனால் அம்மா ஆட்சியில் அனைத்து திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு பெருக வில்லை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது கொலை , கொள்ளைகள் அதிகரித்துள்ளது. புதிய தொழிற்சாலைகள் எதுவும் துவக்கப்பட வில்லை.

 



இந்தக்ககூட்டம் வெற்றி பெற அயராது பாடுபட்ட, ஆரவாரத்தோடு, ஆர்வத்தோடு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ள எம்.ஆர்.கே., பன்னீர்செல்வத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்து கொள்கிறேன்.இங்கு வந்துள்ள கூட்டத்தை கண்ட நான் பெருமை கொள்கிறேன். இந்த கடலூர் மாவட்டம் பெருமை கொண்டது. வள்ளலார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை தந்தது இந்த பூமி. புரட்சி ஏற்பட காரணமாக இருந்த தி.மு.க.,வில் உங்களில் ஒருவனாக நான் மக்களை சந்திப்பதில் பெருமை கொள்கிறேன்.இன்றைய தமிழகத்தில் வீடுகளை விற்க, நிலங்களை விற்க பலர் முன் வருகின்றனர். ஆனால் வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. பணப்புழக்கம் முடக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வருமானம் இல்லை. என்று என்னிடம் பலரும் வருத்தம் தெரிவித்தனர். இவர்களுக்கு நான் ஆறுதல் தெரிவித்தேன்.விவசாய பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். விவசாயம் மடிந்து போச்சு. நிலத்தை விற்கவாவது செய்வோம் என்றால் இதனை வாங்க ஆள் இல்லை. இது போன்று தமிழகம் முழுவதும் இந்த நிலைதான்.4 ஆண்டுகள் ஆட்சியில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.4 ஆண்டாக மக்களுக்கு எதுவும் செய்யாத அரசை தட்டிக்கேட்க வேண்டாமா? தமிழகமே கொந்தளிக்கும் என்ற பயம் அரசுக்கு ஏற்பட வேண்டாமா? நீதிக்கேட்கும் உணர்வு மக்களுக்கு வந்தாக வேண்டும்.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை 16 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தித் தந்தவர் கலைஞர். வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்றுத்தந்தவர் கலைஞர்.



தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் சொல்லமுடியாத துயரத்தில் இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கி பெற்றி பெற்ற ஆணவத்தில் அதிமுக. திளைக்கிறது. பொதுத்தேர்தலிலும் வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ள அதிமுகவிற்கு இடம் தரக்கூடாது.சட்டசபை தேர்தல், நடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ளது. பிரவீன்குமார் ஆணையராக இருந்தார். இவர் அக்கிரமத்திற்கு துணை நின்றார். இப்போது சந்தீப் சக்சேனா, பிரவீன் குமாரை தோற்கடிக்கும் அவர் அக்கிரமத்திற்கு துணை போய் இருக்கிறார்.சமீபத்திய இடைத்தேர்தலில் ஓட்டுக்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. தொகுதியில் தொடர்பு இல்லாதவர்கள் கள்ள ஓட்டு போட்டனர். நான் கலைஞர் மகன். எதையும் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டேன்.மாவட்டம்தோறும் உயிருடன் இருக்கும் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினரின் பெயர்களை இறந்ததாகக் கூறி திட்டமிட்டே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறதுஇவ்வாறு குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், பூவிருந்தவல்லி தொகுதியில் இறந்ததாக கூறி நீக்கப்பட்ட 4 பேரை மேடையில் ஏற்றி அறிமுகம் செய்துவைத்தார்

இக்கூட்டம் சுமார் ஆறு மணிநேரமாக நடைபெற்றது இதனால் பரங்கிப்பேட்டை-கடலூர்,கடலூர்-சிதம்பரம் செல்லும் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது....இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக