பரங்கிப்பேட்டை: ஹிஜ்ரி 1436 (2015) ஆண்டின் ரமலான் மாதம் நேற்று நிறைவடைந்து ஷவ்வால் பிறை முதல் நாளன இன்று பரங்கிப்பேட்டையில் சந்தோஷம், உற்சாகம், மகிழ்ச்சி, குதூகலத்துடன் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, இன்று காலை மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி,வாத்தியாப்பள்ளி திடல்,மற்றும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்கஸ் பள்ளி அருகே திடல் உள்ளிட்ட இடங்களில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இன்று காலை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் நடைபெற்ற பெருநாள் சிறப்பு தொழுகையில் ஏராலமனோர் பங்கேற்றனர் தொழுகைக்குப் பிறகு ஒருவருக்கு ஒருவர் தமது வாழ்த்துகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.
வாத்தியாப்பள்ளி (திடலில்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நோன்புப் பெருநாள் தொழுகை இன்று காலை சிறப்பாக நடைப்பெற்றது. கபீர் அஹமது மதனி அவர்கள் தொழுகை அதன் பின் குத்பா உரை நிகழ்த்தினர், இதில் ஏரளமான ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் பரங்கிப்பேட்டை நகர கிளை சார்பில் நோன்பு பெருநாள் தொழகை மர்கஸ் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது. இன்று காலை 7.30 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது. அதனை தொடர்ந்து A. யூசுப் அலி குத்பா உரை நிகழ்த்தினார் இதில் ஏரளமான ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டனர்.
படங்கள் : முக நூல்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக