பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை கரிகுப்பத்தில் அமைகக்கப்பட்டு வரும் ilfs பவர் கம்பெனி தனியார் மின் உற்பத்தி நிலைய காவலாளி மர்மமான முறையில் சனிக்கிழமை காலை இறந்து கிடந்தார். அவரது சடலத்தைப் பெற மறுத்து உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சிதம்பரம் அரசு மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரங்கிப்பேட்டை கரிக்குப்பத்தில் தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு பால்வாத்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்த உத்தரகுமார் (42) காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் நிலையத்தின் வளாகச் சுவர் அருகே உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் சனிக்கிழமை காலை இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.
உத்தரகுமார் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களும், ஊர் மக்களும் தெரிவித்ததையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே, காவலாளி உத்தரகுமார் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சடலத்தைப் பெற மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டச் செயலர் வ.க.செல்லப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை முன் ஞாயிற்றுக்கிழமை காலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சுந்தரவடிவேல், காவல் ஆய்வாளர்கள் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், ரமேஷ்ராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தனியார் மின் உற்பத்தி நிறுவன அதிகாரிகள், புவனகிரி வட்டாட்சியர் ராஜவேலு, காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சுந்தரவடிவேல் ஆகியோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் வ.க.செல்லப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் எஸ்.ரமேஷ்பாபு, பி.கற்பனைச்செல்வம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
ஏற்கனவே கணினி நிர்வாக அதிகாரி குடியிருப்பில் உள்ள அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஏற்பட்ட விபத்தில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தொழிலர்கள் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே கணினி நிர்வாக அதிகாரி குடியிருப்பில் உள்ள அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஏற்பட்ட விபத்தில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தொழிலர்கள் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது









0 கருத்துகள்:
கருத்துரையிடுக