கடலூர்:சிறுபான்மையின மாணவ–மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
காலஅவகாசம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ–மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகள் ஆன்–லைனில் விண்ணப்பங்களை கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு அடுத்தமாதம்(ஆகஸ்டு) 15–ந்தேதி வரையும், கல்வி நிலையங்கள் அந்த விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலரிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அடுத்தமாதம்(ஆகஸ்டு) 31–ந்தேதிவரையும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேப்போல் 9 மற்றும் 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகள் ஆன்–லைனில் விண்ணப்பங்களை கல்விநிலையத்துக்கு அனுப்புவதற்கும், அந்த விண்ணப்பங்களை ஆன்–லைன் மூலம் அனுப்புவதற்குமான காலஅவகாசம் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 31–ந்தேதி வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக