சிங்கப்பூர்;சிங்கப்பூரில் உள்ள முன்னணி நிறுவனங்களில் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் நபர்கள் தங்கள் குடும்பத்தினரை சிங்கப்பூருக்கு அழைத்து வருவதற்கான சம்பள வரம்பினை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, இனி குறைந்தபட்சம் 5000 சிங்கப்பூர் டாலர்கள் சம்பாதிப்பவர்கள் மட்டுமே குடும்பத் துணை மற்றும் குழந்தைகளை நீண்ட கால விசாவில் வரவழைக்க முடியும். இதற்கு முன் இந்த வரம்பு 4 ஆயிரம் சிங்கப்பூர் டாலராக இருந்தது.
இதேபோல் பெற்றோர்களை நீண்ட கால விசாவில் வரவழைக்க விரும்புவோருக்கான சம்பள வரம்பு 8 ஆயிரம் சிங்கப்பூர் டாலரில் இருந்து 10 ஆயிரம் டாலராக உயர்த்தப்படுகிறது. இந்த நடைமுறை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையானது, குறைந்த சம்பளம் வாங்கும் சாதாரண பணியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக