வியாழன், 23 ஜூலை, 2015

பவர் பிளான்ட்டில் இறந்த காவலாளி குடும்பத்துக்கு நிவாரணம்

பரங்கிப்பேட்டை:  மர்மமான முறையில் இறந்த தனியார் மின் நிலைய காவலாளியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்  கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார்.
 பரங்கிபேட்டை கரிகுப்பதில்  உள்ள தனியார் மின் நிலையத்தில், பால்வாத்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்த உத்திரகுமார் (42) காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 18ஆம் தேதி உடலில் காயங்களுடன் மின் நிலைய சுற்றுச் சுவர் அருகே சடலமாகக் கிடந்தார். இதுதொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறந்த காவலாளி குடும்பத்துக்கு மின் நிலைய நிர்வாகம் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்து, செவ்வாய்க்கிழமை அதற்கான காசோலையை வழங்கியது.
 காவலாளியின் குடும்பத்தினர் காசோலையை சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து காசோலையை பெற்ற சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், காவலாளி குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை செவ்வாய்க்கிழமை வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது பரங்கிப்பேட்டை ஒன்றிய விவசாய சங்கச் செயலாளர் கருணைச்செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக