வயிற்றுப்போக்கினால் இறப்பை தடுக்க வயிற்றுப்போக்கினால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பை தடுப்பதற்காக வருகிற 27–ந்தேதி முதல் அடுத்த மாதம் 8–ந்தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாடு இருவார முகாம் கடலூர் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. இது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் கடலூரில் கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் பேசியதாவது:–
கடலூர் மாவட்டத்தில் தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு இருவார முகாம் வருகிற 27–ந்தேதி முதல் அடுத்த மாதம் 8–ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதன் முதல் வாரத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வயிற்றுப்போக்கு ஏற்படும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக உப்பு சர்க்கரை கரைசல் நீர் வைக்கப்பட வேண்டும்.
துத்தநாக மாத்திரைகள் மேலும் மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் பாக்கெட்டும், துத்தநாக மாத்திரையும் வீடு, வீடாக சென்று வழங்கப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு குழந்தைக்கும் 14 துத்தநாக மாத்திரைகள் வழங்கப்படும்.
2–வது வாரத்தில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் எடை அளவு எடுக்கப்பட்டு, சத்துக் குறைவான குழந்தைகளை அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். பிறந்தகுழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில் 6 மாத காலங்கள் வரைதாய்ப்பால் ஊட்டும் முறைபற்றியும், 6 மாதங்களுக்குப்பின் இணைஉணவு வழங்கும் முறை பற்றியும் விழிப்புணர்வு அளிக்கப்படும். பள்ளிக்குழந்தைகளிடையே கை கழுவுதல்பற்றி விளக்கிக்காட்டப்பட வேண்டும்.
குளோரின் கலந்த நீர் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கிருமிகள் தண்ணீர் மூலமே பரவுவதால், அதை கட்டுப்படுத்த அனைத்து நீர்தேக்கத்தொட்டிகளையும் பிளிச்சிங் பவுடரால் சுத்தம் செய்து, தினமும் குளோரின் கலந்து குடிதண்ணீர் வினியோகிக்க வேண்டும் என்று உள்ளாட்சி நிர்வாகங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் கூறினார்.
கூட்டத்தில் சுகாதாரப்பணிகள் துணைஇயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக