புதன், 29 ஜூலை, 2015

மறைந்த A.P.J அப்துல் கலாமிற்கு பரங்கிப்பேட்டையில் இரங்கல் பேரணி

பரங்கிப்பேட்டை : மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பரங்கிப்பேட்டையில்
அமைதி பேரணி மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
 
இந்திய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள மக்கள் குடியரசுத் தலைவராக வாழ்ந்து மறைந்த டாக்டர் A.P.J.அப்துல் கலாமின் மறைவையொட்டி பங்கிப்பேட்டை ஊர் பொதுமக்கள் அனைத்து  ஆசிரியர்கள் சார்பாக பேருராட்சி தலைவர்  M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில் அப்துல்கலாம் அவர்களுக்கு
அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் மற்றும் அமைதி பேரணி நடைபெற்றது...!
இதில் பரங்கிப்பேட்டை யில் உள்ள அரசு மற்றும் தனியார் அணைத்து பள்ளிஆசிரியர்களும் 
மாணவர்களும் பங்கிப்பேட்டை ஊர் பொதுமக்களளும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர் 
முன்னதாக அமைதி பேரணி  பேரூராட்சி அலுவலாக வலகத்தில் ஆரம்பித்து  உறின் பிராதன சாலைகளின்  வழியே சென்று பேருந்து நிலையம் அடுத்து காந்தி சிலை அருகே நிறைவடைந்தது பின்னர் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது...!


 





 

மேலும் நாளை இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஆட்டோகள் ஓடாது  என்று ஆட்டோ தொழிற் சங்கம் அறிவித்துள்ளது கடைகளும் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கமும் அறிவித்துள்ளது
மேலும் தமிழகத்தில் அனைத்து தொழில் நிறுவனங்களும் நாளை டாக்டர் கலாம் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறுவதால்,வியாழக்கிழமை அன்று (30.07.2015) தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் பிறந்து, இங்கேயே படித்து, ஆராய்ச்சி செய்து, குடியரசுத் தலைவராக பதவி வகித்து, மக்கள் ஜனாதிபதியாக வாழ்ந்து, தனது இறுதி மூச்சையும் இங்கேயே விட்டுள்ளார் அப்துல் கலாம். அவரது திடீர் மறைவால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது.
 



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக