புதன், 24 ஜூன், 2015

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு


கடலூர் : பரங்கிப்பேட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பத்து மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
கடலூரில் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு மகளிர் நல்வாழ்வு முன்னேற்றக் குழு, இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையம் ஆகியன ஏற்பாடு செய்திருந்தது. கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி, 20 மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினார். பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், துணைத் தலைவர் நடராஜன், அல் ஹசனாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் மதனி முன்னிலை வகித்தனர்.விழா ஏற்பாடுகளை தவுலத் அலி, ஹாஜா பக்ருதீன், முகமது ஷரீப் செய்திருந்தனர்.


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக