
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் கொடியேற்று விழா நடந்தது.எஸ்.டி.பி.ஐ., கட்சியின் 7ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி பரங்கிப்பேட்டை நகுதா மரைக்காயர் தெரு, பெரிய தெரு ஆகிய இரண்டு இடங்களில் கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட பொதுச்செயலர் ஹமீது ப்ரோஜ் தலைமை தாங்கினார். சிதம்பரம் தொகுதி நிர்வாகிகள் யூனுஸ், ஹசன்கான் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலர் அப்துல் சத்தார் கொடியேற்றினார்.சையது முஸ்தபா, கஜ்ஜாலி, கவுஸ் ஹமீது, ஹமீது கவுஸ், முகம்மது சலீம் பங்கேற்றனர்










0 கருத்துகள்:
கருத்துரையிடுக