புதன், 24 ஜூன், 2015

தனியார் அனல்மின் நிலையத்திற்கு"புதிய ஸ்டேஷன் யார்டு


பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பரங்கிப்பேட்டை கரிக்குப்பம் தனியார் அனல்மின் நிலையத்திற்கு"நியூ ஸ்டேஷன் யார்டு' அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பரங்கிப்பேட்டை  கரிக்குப்பம் பகுதியில் ஐ.எல்.அண்ட் எப்.எஸ்., தனியார் கம்பெனி சார்பில் 1,300 ஏக்கர் பரப்பில், 2,400 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்க கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மின்சார உற்பத்திக்கு தேவைப்படும் முக்கிய கச்சா பொருளான நிலக்கரியை சரக்கு ரயில் மூலம் கம்பெனிக்கு கொண்டு செல்லும் வகையில் புதிதாக ரயில்வே பாதை அமைக்கப்படுகிறது.இதற்கு புதுச்சத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து கரிக்குப்பம் கம்பெனி வரை 5 கி.மீ., தொலைவிற்கு 10 கோடி ரூபாய் செலவில் 2 ரயில் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனையொட்டி முதலில் செம்மண் கிராவல் அடித்து சமன் செய்யப்பட்டது.பின்னர் கருங்கல் ஜல்லி நிரப்பி, சிமென்ட் கட்டைகள் அடுக்கப்பட்டு அதன் மீது இரும்பு தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது "நியூ ஸ்டேஷன் யார்டு' அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக