பரங்கிப்பேட்டை : குற்றங்களை தடுக்கும் வகையில் "ஆல்பா' பெயருடைய பைக்கில்
போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டம் முழுவதும் 13 ஹைவே பேட்ரோல் போலீசார் காரில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அரசு பள்ளிகள், வங்கிகள், ஏ.டி.எம்., இயந்திரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குற்றங்களை தடுப்பதற்காக தற்போது மாவட்டம் முழுவதும் 13 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஆல்பா பெயருடைய பைக்குகள் வழங்கப்பட்டுள்ளது.சிதம்பரம் உட்கோட்டத்தில் சிதம்பரம் டவுன், சிதம்பரம் தாலுகா மற்றும் பரங்கிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் சரகப் பகுதிகளில் "ஆல்பா' பெயருடைய பைக்கில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். "ஆல்பா' பைக்கில் செல்லும் போலீசாருக்கு ஒயர்லெஸ் வழங்கப்பட்டுள்ளது.அவர்கள் சம்மந்தப்பட்ட போலீஸ் சரகத்தில் உள்ள அரசு பள்ளிகள், வங்கிகள், ஏ.டி.எம்., இயந்திரம் உள்ளிட்ட இடங்களில் குற்றங்கள் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும். மேலும் சாலை விபத்துகள் ஏற்படும்போது சம்மந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த முன்னேற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதை சரி செய்ய வேண்டும்.சிதம்பரம் உட்கோட்டத்தில் சிதம்பரம், சிதம்பரம் தாலுகா, பரங்கிப்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் "ஆல்பா' பெயருடைய பைக்கில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக