பரங்கிப்பேட்டை : சாமியார்பேட்டை கடற்கரையில் பராமரிப்பின்றி பாழாகி வரும் சிறுவர் பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை கடற்கரைக்கு சிதம்பரம், புதுச்சத்திரம், புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் வருகின்றனர்.அதனையொட்டி கடற்கரைக்கு வரும் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்திட கடந்த 2013-14 ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மான்ய நிதி திட்டத்தின் கீழ் 5 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.பூங்கா பராமரிப்பின்றி, செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காடு போல் காட்சி அளிக்கிறது. மேலும், இங்குள்ள சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் உடைந்து சேதமடைந்துள்ளதால் குழந்தைகள் விளையாட முடிவதில்லை. இதனால், கடற்கரைக்கு மக்களின் வருகை குறைந்து வருகிறது. எனவே, கடற்கரை பூங்காவையும், சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களையும் சீரமைத்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக