வெள்ளி, 26 ஜூன், 2015

வத்தக்கரை மீன் ஏலம் விடும் தளத்திற்கு 200 டன் மத்தி மீன்கள் வரத்து

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை  வத்தக்கரை  ஏலம் விடும் தளத்திற்கு நேற்று 200 டன் மத்தி மீன்கள் வந்தன.

 பரங்கிப்பேட்டை,  சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், மடவாபள்ளம், முடசல் ஓடை உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்தனர். இதில் 200 டன் மத்தி மீன்கள் சிக்கின இதை அன்னங்கோவில் மீன் ஏலம் விடும் தளத்திற்கு அவர்கள் நேற்று கொண்டுவந்தனர். இதையடுத்து கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். இது குறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:- மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு நாள் ஒன்றுக்கு எங்களது வலையில் சுமார் 50 முதல் 80 டன் வரைக்கும் மீன்கள் சிக்கி வந்தன.



இந்த நிலையில் நேற்று முன்தினம் நாங்கள் எதிர்பாராத அளவிற்கு 200 டன் மத்தி மீன்கள் வலையில் சிக்கின. மேலும் ஒரு டன் மத்தி மீன்கள் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இதனால் மீனவர்களான நாங்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். மீன்கள் வரத்து அதிகரிப்பால்  வத்தக்கரை மீன் ஏலம் விடும் தளம் தற்போது பரபரப்புடன் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

 
 
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக