செவ்வாய், 23 ஜூன், 2015

தமிழகத்தில் நிலத்தடி நீர் 77 சதவீதம் குறைந்தது: நிலத்தடி நீர் வாரியம் அதிர்ச்சி தகவல்





சென்னை :தமிழகத்தில் நிலத்தடி நீர் 77 சதவீதம் குறைந்திருக்கும் அதிர்ச்சி தகவலை மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்துள்ளது.
மழை காலங்களில் கிடைக்கும் நீர் நிலத்துக்கடியில் ஊறி, கடினப் பாறைகளின் சிதைவுற்ற பாகங்களிலும், படிவுப் பாறை களிலும், மணல் மற்றும் கூழாங்கற்களின் இடுக்குகளிலும் தேங்கி நிற்பதைதான் நிலத்தடி நீர் என்கிறோம். இவை நீர்த் தாங்கிகள் என்றும் அழைக்கப்படுகிறது. இன்று விவசாயம், குடிநீர் போன்றவற்றுக்கான நீர்த் தேவை நிலத்தடி நீரின் மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, சிவகங்கை, புதுக் கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும்தான் கிடைக்கும் மழை நீரை விட குறை வாக நிலத்தடி நீரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கிருஷ்ண கிரி, தருமபுரி, வேலூர், திரு வண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கிடைக்கும் மழை நீரை விட அதிகமாக, நிலத்தடி நீர் உறிஞ் சப்பட்டு வருகிறது.
உயரதிகாரி விளக்கம்
இது தொடர்பாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் மண்டல இயக்குநர் ஏ.சுப்புராஜ் கூறிய தாவது:
தமிழகத்தில் மத்திய நிலத் தடி நீர் வாரியம் சார்பில் 1500 இடங்களில் நிலத்தடி நீர் தொடர்பாக ஆண்டு 4 முறை ஆய்வு செய்து வருகிறோம். இது தொடர்பாக கடந்த 50 ஆண்டு புள்ளிவிவரங்களை வைத்திருக்கிறோம்.
தமிழகத்தில் ஆறு, ஏரிகள் வறண்டுவிட்டன. மொத்தம் உள்ள நிலத்தடி நீர் வளத்தில் 2011-ம் ஆண்டு நிலவரப்படி 77 சதவீதம் குறைந்துவிட்டது. கிடைக்கும் மழை நீரை விட, அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நிலத்தடி நீர் வளத்தை பெருக்குவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். அதனால் மழை நீரை விட அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சப்படுவதாக கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில் நிலத்தடி நீர் மேலாண்மை பயிற்சியை இளைஞர்களுக்கு அளிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
இப்பயிற்சியில் வீடுகளில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் சேமிப்பது, வேளாண் பணிகளின்போது, சொட்டு நீர் பாசனத்தை கடைபிடிப்பது, மழைநீர் சேமிப்பு உள்ளிட்டவை தொடர்பாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சம்மந்தப்பட்ட கிராமத்தில் இளைஞர்களே மழை அளவை கணக்கிடுவது, ஏரி மற்றும் தடுப்பணைகளில் உள்ள நீரின் அளவை கணக்கிடுவது போன்றவை தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்படும்.
இது மட்டுமல்லாது குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீர் கிடைக்கக்கூடிய அளவு, அதன் தரம் போன்ற விவரங்களை பொதுமக்கள் அறியும் விதமாக நீர் தாங்கிகளின் முப்பரிணாம வரைபடத்தை சோதனை முறை யில் கடலூர் மாவட்டம் வெல்லாற் றில் உருவாக்கியிருக்கிறோம். அது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக