பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் மூனா ஆஸ்திரேலியன் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு எதிர்ப்பு ஊர்வலம் நடந்தது.சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பயன்பாட்டை எதிர்த்து பரங்கிப்பேட்டையில் மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் மூனா சாரணர் குழு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் பிச்சையப்பன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மகேஷ் சுந்தர் வரவேற்றார்.சாரண மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட சாரண தலைவர் சுவேதகுமார் துவக்கி வைத்தார். மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை முக்கிய தெருக்களில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் ஒட்டினர். மாவட்ட சாரண பயிற்சி ஆணையர் இளையகுமார், மாவட்ட அமைப்பு ஆணையர் வேலாயுதம், டாக்டர் ரகுமான் அறக்கட்டளை தலைவரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார், சாரண ஆசிரியை கயல்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.















0 கருத்துகள்:
கருத்துரையிடுக