கடலூர்:கடலூரில் நாளை 19ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரும்
வகையில் நாளை 19ம் தேதி காலை 11:00 மணிக்கு கடலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 10க்கும் மேற்பட்ட முன்னணி
நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய
உள்ளனர்.
முகாமில் 10ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம். முகாமில் தேர்வு செய்யப்படுபவர்கள், வேலைவாய்ப்பு பதிவட்டை, உயிர் பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். அரசு பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்புகள் வரும்போது, விதிமுறைகளின்படி பரிந்துரை செய்யப்படும். எனவே, மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்.
மேலும், பணியாட்கள் தேவைப்படும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு, தங்களுக்கு தேவைப்படும் பணியாளர் விபரத்தை தெரிவித்து, முகாமில் பங்கேற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து விபரம் வேண்டுவோர் 04142-290039 என்ற தொலைபேசில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக