பரங்கிப்பேட்டை:பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு கூடுதல் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
பரங்கிப்பேட்டை அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இப்பகுதியில்
சுரபுண்ணை என்கிற மாங்குரோவ் சதுப்பு நிலக்காடு உள்ளதால், உலகின் பல்வேறு
பகுதிகளில் இருந்தும் தினசரி சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
சுற்றுலா மையத்திற்கு வரும் வாகனங்களுக்கு ”ங்க வரி வசூலிக்க கிள்ளை பேரூராட்சி
நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டுள்ளது.
ஆனால், குத்தகைதாரர் சுற்றுலா மையத்திற்கு வரும் வாகனங்களுக்கு ரசீதில் குறிப்பிட்டுள்ள தொகையைவிட இரண்டரை மடங்கு கூடுதலாக வசூலிக்கின்றனர். காருக்கு 20 ரூபாய் என ரசீது வழங்கப்படுகிறது.
ஆனால், 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கொடுக்கப்படும் ரசீதில் தேதி, ஒப்பந்ததாரர் கையெழுத்து போன்ற விவரம் குறிப்பிடுவதில்லை. கூடுதல் தொகை வசூலிப்பதைத் தட்டிக் கேட்கும் சுற்றுலா பயணிகளை ஆபாசமாக திட்டுவதோடு, மிரட்டப்படுகின்றனர்.
சுங்க வரி வசூலிக்கும் ஒப்பந்ததாரரின் அடாவடி செயலால் சுற்றுலா பயணிகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனைத் தவிர்த்திட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு நல்ல தீற்வு எட்ட வேண்டும்
பதிலளிநீக்கு