செவ்வாய், 16 டிசம்பர், 2014

பரங்கிபேட்டையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி :உடலை வாங்க மறுத்து சாலை மறியல்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 40), விவசாயி. இன்று காலை அவர் வீட்டின் அருகே   மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. இதை பார்க்காமல் ஜெகநாதன் மின்கம்பி மீது மிதித்து விட்டார். இதில் அவரை மின்சாரம் தாக்கியது.
இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஜோதிகுமார் என்பவர் மனைவி காவேரி (34) அங்கு ஓடி வந்தார். மின்சாரம் தாக்கிய ஜெகநாதனை பிடித்து இழுத்து காப்பாற்ற முயன்றார். இதில் காவேரிமீதும் பாய்ந்தது. சிறிது நேரத்தில் ஜெகநாதனும், காவேரியும்  பலியானார்கள். மின்துறை ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தினார்கள்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் உதயகுமார் சப்–இன்ஸ்பெக்டர் பாண்டி செல்வி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டார்கள். மின்சாரம் தாக்கி பலியான 2 பேரையும் மீட்டு பரங்கிபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மின்சாரம் தாக்கி ஒரே நேரத்தில் 2 பேர் பலியான சம்பவத்தால் இந்த பகுதி மக்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.





10 நாட்களுக்கும் மேலாக  சர்வீஸ் லைன் அறுந்து தொங்கியுள்ளது மின்சார வாரியத்திடம் புகார் அளித்தும்  அதை சரி செய்யவில்லை என்றும் மின்சாரம் தாக்கிய பின் சுமார் 1 மனி நேரம் உயிர் இருந்ததாகவும் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துர் இல்லாத காரணத்தால் மருத்துவம் பாக்க முடியாது என்று செவிலிய பெண்கள் முதல் உதவி கூட செய்யவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டி அரசு மருத்துவமனையில் உள்ள உடல்களை வாங்க மறுத்துவருகின்றனர் மேலும்
அலட்சியமாக இருந்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மிக அலட்சியமாக இருந்த பரங்கிபேட்டை மின்சார வாரியம் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை இறந்தவர்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  இறந்தவர்களின் உடலை வாங்கபோவதில்லை என  இறந்தவர்களின் உறவினர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் அரசு மருத்துவ மனை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .







பின்னர் இன்ஸ்பெக்டர் உதயகுமார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து, பகல் 12:00 மணிக்கு சாலை மறியல் கைவிடப்பட்டது. மின்சார விபத்து குறித்து காவேரியின் கணவர் ஜோதிகுமார் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக