செவ்வாய், 16 டிசம்பர், 2014

கடலூர் மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகரிப்பு: மழைப்பொழிவு குறைந்து வருகிறது



கடலூர் : மாவட்டத்தில் இந்த மாதத்தில் 22 மி.மீ. அளவே மழை பெய்துள்ளது.கடலூர் மாவட்டத்தின் ஆண்டின் சராசரி மழை அளவு 1,335,50 மி.மீ., ஆகும். அதில் குளிர் காலமான ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 24.36 மி.மீ., கோடை காலமான மார்ச் முதல் மே மாதம் வரை 143.39 மி.மீ., தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை 325.63 மி.மீ., வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் 842.12 மி.மீ.,
மழை பெய்ய வேண்டும்.அதன்படி மாவட்டத்தில் இந்தாண்டில் குளிர் காலத்தில் 50.12 சதவீதமும், கோடை காலத்தில் 120 சதவீதமும், தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 107 சதவீத அளவிற்கு மழை பெய்தது.குளிர் காலத்தில் போதிய மழை பெய்யவில்லை என்றாலும், அதற்கு அடுத்த கோடை மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் சராசரி அளவைவிட ஓரளவிற்கு கூடுதலாவே மழை பெய்ததால், வடகிழக்கு பருவமழை காலத்திலும் கன மழை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.அதன்படியே வடகிழக்கு பருவமழை துவங்கிய அக்டோபர் மாதத்தில் 277.72 மி.மீ., க்கு 300.66 மி.மீ., மழை பெய்தது. ஆனால், நவம்பர் மாதத்தில் 406.33 மி.மீ.,க்கு 209.93 மி.மீ., அளவே மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்ய வேண்டிய நவம்பர் மாதத்தில் பாதி அளவிற்கே மழை பெய்தது. அதனால், டிசம்பர் மாதத்திலாவது, ஆண்டின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பனிப்பொழிவு துவங்கி விட்டதால், ஓரு சில இடங்களில் மட்டும் லேசாக மழை பெய்து வருகிறது.

1 கருத்துகள்: