பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் பலத்த காற்றுடன் தொடர் மழையால்
கடந்த இரண்டு நாட்களாக 30 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்கள்
படகுகளை கடற்கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை
கடற்கரை கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம்,
புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை, சின்னூர், முடசல் ஓடை உட்பட 30க்கும் மேற்பட்ட
கிராமங்களைச்
சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை வெள்ளாற்று முகத்துவாரம் வழியாக கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் 30 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் தங்களது விசைப்படகுகள், இன்ஜின் படகுகளை முடசல் ஓடை கடற்கரையோரம், அன்னங்கோவில் கடற்கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி செல்லவில்லை. நேற்று மீன் வியாபாரிகள் கேரளா மாநிலத்தில் இருந்து கவலை மீன் மட்டும் கொண்டுவரப்பட்டு பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் 30 கிலோ கொண்ட பாக்ஸ் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இதனால் எப்போதும் பிசியாக இருக்கும் அன்னங்கோவில் மீன் இறங்குதளம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
phots :alameen

மேலும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அதே
இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் வடமாவட்ட கடற்கரை கிராமங்களில் கனமழை
கொட்டியது. நேற்று முன்தினம் காலை 8:00 மணி முதல் நேற்று காலை 8:00 மணி வரை பெய்த
மழையளவு மி.மீ., விவரம்: சிதம்பரம் 60.40, கடலூர் 35.70, பரங்கிப்பேட்டை 44,
காட்டுமன்னார்கோவில் 66, தொழுதூர் 13, ஸ்ரீமுஷ்ணம் 30, விருத்தாசலம் 6.40,
பண்ருட்டி 7, கொத்தவாச்சேரி 31, வானமாதேவி 21.60, அண்ணாமலை நகர் 33.40,
சேத்தியாத்தோப்பு 32, புவனகிரி 75, லால்பேட்டை 62, மேமாத்தூர் 10, காட்டுமயிலூர் 6,
வேப்பூர் 5, குப்பநத்தம் 6.40, லக்கூர் 8.40, பெலாந்துறை 8மி.மீ., மழை பெய்துள்ளது.
புவனகிரியில் அதிகபட்சமாக 75 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக