பரங்கிப்பேட்டை:இந்தியாவின் மிகப் பெரிய வாலிபர் அமைப்பாக கருதப்படும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (Democratic Youth Federation of India - DYFI) எதிர்வரும் டிஸம்பர் 30ந் தேதி பு. முட்லூரில் "போதைக்கு எதிராக ஊரைக்கூட்டுவோம்" என்ற கருப்பொருளில் கலை இரவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இந் நிகழ்ச்சியில், "டாஸ்மாக் கடைகளால் அதிகம் சீரழிவது தனி நபர்களே! சமுதாயமே!" என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சமுதாயத்தில் சிறப்பாக பணியாற்றும் நபர்களுக்கு "மனித நேயர்" விருதுகளும் வழங்கப்படுகின்றன.
இவ்விருது பெறும் பட்டியில் ஊரின் முன்னோடி தளமான MYPNO.COM ன் ஆசிரியர் எம்.ஜி. ஃபக்ருத்தீன் அவர்களும் இடம் பெற்றுள்ளார். சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு கே. பாலகிருஷ்ணன் அவர்கள் விருதுகளை வழங்க இருக்கின்றார்.
விருது பெற இருக்கும் சகோதரர் பக்ருத்தீன் அவர்களுக்கு PNO Express.ன் இனிய வாழ்துக்கள்
நன்றி :mypno.com









0 கருத்துகள்:
கருத்துரையிடுக