கடலூர்:கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:2011–ம் ஆண்டு முதல் 2013 வரை வேலைவாய்ப்புபதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள தமிழக அரசு சலுகையை அறிவித்துள்ளது.
இச் சிறப்பு சலுகையில் புதுப்பித்தல் பெற விரும்பும் பதிவுதாரர்கள் வருகிற மார்ச்(2015) 7–ந் தேதிக்குள் www.tnvelaivaaippu.govt.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
எனவே கடந்த 2011–ம் ஆண்டு முதல் 2013–ம் ஆண்டுவரை தங்களது பதிவுகளை புதுப்பிக்க தவறி பின்னர் புதியதாக மறுபதிவு செய்திருந்தாலோ, பதிவு மாற்றம் செய்திருந்தாலோ இச் சலுகையின் மூலம் பழைய பதிவு மூப்பினை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக