சிதம்பரம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தீவிரவாதத்துக்கு எதிரான தொடர் பிரசாரம் தமிழ்நாடு முழுவதும் கடந்த 1 மாத காலம் (அக்டோபர் 15– நவம்பர் 15) நடந்தது.இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் அனைத்து பெரு நகரங்கள் நகரங்கள் மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று மனித சங்கிலி பிரசாரம் நடந்தது.
இதன் ஒரு பகுதியாக சிதம்பரம் காந்தி சிலை அருகே இன்று (16/11/2014 )ஞாயிற்று கிழமை நடைபெற்ற தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் மாபெரும் மனித சங்கிலியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் குடும்பத்தோடு கலந்துகொண்டனர் மனித சங்கிலியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்று தீவிரவாதத்துக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
கேட்டை விளைவிக்கும் தீவிரவாதத்தை நாட்டை விட்டே விரட்டிடுவோம், இஸ்லாம் போதிப்பது மிதவாதம் என்றும் அது எதிர்ப்பது தீவிரவாதம், தேசத்தை காக்க நேசத்தை வளர்ப்போம், தீவிரவாதத்தை வேரறுப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டை, பேனர்களை வைத்து இருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக மாவட்டத்தில் கடலூர், விருத்தாச்சலம் மற்றும் சிதம்பரம் ஆகிய மூண்று இடங்களில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் மனித சங்கிலி அணிவகுப்பு நடைபெற்றது. பரங்கிப்பேட்டையிலிருந்து ஏரளாமான வாகனங்களில் மக்கள் கலந்துக்கொண்டனர். கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத் தலைவரும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்களும் மற்றும் சமுதாய பெரியவர்களும் கலந்துக்கொண்டார்கள் மனித சங்கிலியில் மாற்றுமதத்தினரும் கணிசமான அளவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தமிழகதின் பெரு நகரங்கள் மாவட்ட தலை நகரங்கள் உட்பட பெரும்பாலான நகரங்களிலும் மனித சங்கிலி பிரசாரம் நடைபெற்றது
photos:tntjpno





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக