ஞாயிறு, 16 நவம்பர், 2014

பங்கிப்பேட்டை அருகே மருத்துவ பரிசோதனை முகாம்

பங்கிப்பேட்டை:  பங்கிப்பேட்டை  ஒன்றியம் சின்னூர் தெற்கு கிராமத்தில் உள்ள சுனாமி மற்றும் புயல் பாதுகாப்பு கட்டடத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, இந்த முகாமை ஐஎல்எஃப்எஸ் பவர் கம்பெனி, தேஷ், அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துளசி மருந்தகம் மற்றும் ஹன்னா மருந்தகம் ஆகியன இணைந்து நடத்தியன.
முகாமில் விழிப்புணர்வுக் கூட்டம், சிறப்பு மருத்துவ முகாம், பெண்களுக்கான மங்கையரில் மகாராணி எனும் சமையல் போட்டி, மிஸ்டர் பரங்கிப்பேட்டை ஆணழகன் போட்டி, மனிதச் சங்கிலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடக்க விழாவில் புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினர் செல்விராமஜெயம் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு துணைத் தலைவர் திருமாறன் நீரிழிவு நோய் விழிப்புணர்வு மனித சங்கிலிச் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகி நடுவராக இருந்து போட்டிகளை நடத்தினார். பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் கே.அசோகன், பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜ் ஆகியோர் பேசினர்.
முகாமில் ஐஎல்எஃப்எஸ் நிறுவன துணைத் தலைவர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் கருணாநிதி, தேஷ் தொண்டு நிறுவனத் தலைவர் சரஸ்வதி சங்கரன், டாக்டர் லட்சுமிபாய், சீனியார் மேனேஜர் நவீன்குமார், அருண்பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பிரேம்குமார், ஹென்றி லாரன்ஸ், விஜயக்குமார் மற்றும் களப்பணியாளர்கள் செய்திருந்தனர். முகாமில் 432 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 211 பேருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிசோதிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக