வெள்ளி, 7 நவம்பர், 2014

சவுதி அரேபியாவில் EXIT விசாவில் செல்பவர்களுக்கு 2 வருட தடை விதிக்க கோரிக்கை!

ரியாத்:சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் தாம் பணியாற்றும் நிறுவனத்துடனான உடன்படிக்கையை மீறி எக்சிட் விசா அனுமதியைப் பெற்று நாட்டை விட்டு வெளியேறும் போது மீண்டும் இரு வருடங்களுக்கு சவுதி அரேபியாவுக்கு பணி நிமித்தம் வருவதைத் தடை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை சவுதி வர்த்தக சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி பிரஜைகளுக்கான தொழில்வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு கட்டமாகவே The Council of Saudi Chambers (CSC) அமைப்பின் தொழிலாளர் பிரிவினால் இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் கட்டாரிலும் இவ்வாறான விதிமுறையிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் சவுதி அரேபியாவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டுப் பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சவுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக