ஞாயிறு, 16 நவம்பர், 2014

பாழடைந்த கட்டடத்தில் சமையல்; பரங்கிப்பேட்டை பள்ளியில் அவலம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சமையல் கூடம் இல்லாததால் பாழடைந்த கட்டடத்தில் ஆபத்தான நிலையில் சமையல் செய்து வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை சலங்குகார தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளிக் கட்டடம் விரிசல் ஏற்பட்டும், ஜன்னல்கள் பெயர்ந்தும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை இருந்ததால் புதிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டு பள்ளி இயங்கி வருகிறது.ஆனால், மாணவர்களுக்கு மதிய சத்துணவு சமைக்க சமையல் செய்ய சமையல் கூடம்
இல்லாததால் இடிக்கப்படாத பாழடைந்த பள்ளிக் கட்டடத்தில் ஆபத்தான நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சமையல் செய்து வருகின்றனர்.தற்போது மழைக்காலமாக இருப்பதால் பாழடைந்த பள்ளி கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை உள்ளது. மாணவர்கள் மதிய உணவு வாங்கவும், மாலை நேரத்தில் விளையாடவும் அபாயகரமான கட்டடம் உள்ள பகுதிக்குச் செல்கின்றனர்.இந்த கட்டடத்தை இடிக்கக்கோரி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கிராம நிர்வாகம் சார்பில் கல்வித்துறை மற்றும் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு கொடுத்தும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.விபரீதம் ஏற்படும் முன் பாழடைந்த பள்ளிக் கட்டடத்தை இடிக்கவும், புதியதாக சமையல் கூடம் கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
photo: file (examble)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக