பரங்கிப்பேட்டை:இன்று (06/11/2014) பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி.இராமஜெயம் , சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி ஆகியோரை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பாக கேப்டன்.ஹமீது அப்துல் காதர் சந்தித்து பரங்கிப்பேட்டையில் அதி தீவிரமாக பரவி வரும் டெங்கு சம்ம்மந்தாமாக மனு ஒன்றை அளித்தார்.
மேலும் அவர்களிடம் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பாக டெங்கு விஷயத்தில் செய்து வரும் செயல்பாடுகளான கொசுமருந்து அடிப்பது, விழிப்புணர்வுக்கான ஏற்பாடுகள் போன்றவற்றை விவரித்தவர், இதன் தீவிர நிலையை விவரிக்கும் வகையில் எடுத்து கூறி அவர்களும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
விஷயத்தின் தீவிரத்தை புரிந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி.இராமஜெயமும் , சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசியும் நிச்சயம் உரிய நடவடிக்கை விரைவாக எடுப்பதாக உறுதியளித்தனர்.
நன்றி:mypno

0 கருத்துகள்:
கருத்துரையிடுக